காளஹஸ்தி கோவில் உண்டியலில் ரூ.1.12 கோடி காணிக்கை
ADDED :2989 days ago
நகரி : காளஹஸ்தி கோவில் உண்டியலில், 21 நாட்களில், 1.12 கோடி ரூபாய், பக்தர்கள் காணிக்கையாக கிடைத்துள்ளது. ஆந்திரா, சித்துார் மாவட்டம், காளஹஸ்தியில், வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, சுவாமியை தரிசிக்கின்றனர். பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை மூலம், 21 நாட்களில், 1.12 கோடி ரூபாய் ரொக்கம், 448 கிலோ வெள்ளி, 94 வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை இருந்தன. இத்தகவலை, கோவில் நிர்வாக அதிகாரி பிரம்மரம்பா தெரிவித்தார்.