மாங்கல்யம் காக்கும் விரதம்
ADDED :2699 days ago
மாங்கல்யபலம் வேண்டி அம்பிகையை வழிபடும் விரதம் பராசக்தி விரதம். இவ்விரதத்தை தமிழ் மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையில் மேற்கொள்வது வழக்கம். அதிகாலையில் நீராடி காலையில் விநாயகரை வழிபட்டு விரதத்தைத் துவங்கவேண்டும். செந்நிற மலர்களான செம்பருத்தி, அரளிப்பூக்களை தேவிக்கு அணிவிக்க வேண்டும். நிவேதனமாக பால், வாழைப்பழம், இளநீர், வெற்றிலை பாக்கு ஆகியவற்றைப் படைத்து பூஜை செய்வர். விரதம் மேற்கொள்பவர்கள் யாராவது ஒரு ஏழைக்கு அன்னதானம் செய்து விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இந்த விரதத்தால் தீர்க்கசுமங்கலியாக வாழ்வதோடு தம்பதியர்ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதீகம்.