உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

கோவை சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

கோவை: கோவை பாப்பநாய்க்கன்பாளையம் சீனிவாச பெருமாள் கோவில் பிரமோத்ஸவ நிகழ்வின் இறுதி நாளான நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் சுவாமி, ஸ்ரீதேவி , பூதேவியுடன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் அமைந்துள்ளது, சீனிவாசப் பெருமாள் கோவில். இக்கோவிலில், பிரம்மோற்சவ விழா, கடந்த 26ம் தேதி மாலை, கருட பிரதிஷ்டையுடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடக்கின்றன. விழா நாட்களில், தினமும் ஒவ்வொரு வாகனத்தில், சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின்  இறுதி நாளான நேற்று திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.  இதில் சுவாமி, ஸ்ரீதேவி , பூதேவியுடன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !