சங்கமேஸ்வரர் கோவிலில் 16 கடைகளுக்கான ஏலம்
ADDED :2794 days ago
பவானி: பவானி, சங்கமேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்னால் உள்ள, 10 கடைகள், யாத்திரை விடுதி முன்புறம் உள்ள, 13 கடைகள் வாடகை உரிமம், இந்தாண்டு ஜூலை, 1 முதல், 2021 ஜூன், 30 முடிய அனுபவித்து கொள்ளும், உரிமத்திற்கான பொது ஏலம் நேற்று மதியம் நடந்தது. பண்ணாரி மாரியம்மன் கோவில் தக்கார் பழனிக்குமார், சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சபர்பதி, வாழை தோட்டத்து அய்யன் கோவில் உதவி ஆணையர் மேனகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பவானி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 50க்கும் மேற்பட்ட ஏலதாரர்கள் ஏலம் கேட்டனர். 23 கடைகளில், ஏழு கடைகளுக்கு யாரும் ஏலம் கேட்காத பட்சத்தில், அந்த கடைகளுக்கான ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. 16 கடைகளுக்கு, 46 லட்சத்து, 30 ஆயிரத்து, 800 ரூபாய்க்கு ஏலம் நடந்தது.