நரிக்குடி அழகிய மீனாள் கோயில் திருவிழா
ADDED :2753 days ago
நரிக்குடி: நரிக்குடி அழகிய மீனாள் கோயில் வைகாசி பூச்சொரிதல் திருவிழா, காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடத்தப்பட்டது. குத்து விளக்கு பூஜை, பொங்கல் வைத்து வழிபட்டு, இரவு பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.