உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எமதர்மர் கோவிலில் விழா

எமதர்மர் கோவிலில் விழா

 மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகேவுள்ள சென்னம்பாளையத்தில், எமதர்மர் கோவில் புதிதாக கட்டப்பட்டது. இக்கோவிலில் கும்பாபிேஷகம் நடத்தி மூன்று ஆண்டுகள் ஆனதால், மூன்றாம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.இக்கோவில் வளாகத்தில் உள்ள இன்ப விநாயகர், காலகாலேஸ்வரர், மூலவர் எமதர்மர் ஆகிய தெய்வங்களுக்கு இளநீர், பன்னீர் அபிேஷகங்கள் செய்யப்பட்டன.அதன் பிறகு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !