தேவிபட்டினத்தில் கோயில் இடிப்பு
ADDED :2693 days ago
தேவிபட்டினம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே ஓட்டமடத்து முனியய்யா கோயில் சமூக விரோதிகளால் இடிக்கப்பட்டது. இக்கோயிலில் பீடமும், சுற்றி முள்வேலியும் இருந்தது. நேற்று முன்தினம் இரவு சிலர் வேலியை உடைத்து உள்ளே புகுந்து பீடத்தை இடித்து தள்ளினர். காலையில் கோயிலுக்கு வந்து பக்தர்கள் கோயில் இடிக்கப்பட்டதை கண்டித்து அப்பகுதியில் திரண்டனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகி வைரவநாதன் புகாரின்படி போலீசார் விசாரிக்கின்றனர்.