உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை முருகன் கோவிலில் மீண்டும் அடர் வெள்ளை வர்ணம்

சென்னிமலை முருகன் கோவிலில் மீண்டும் அடர் வெள்ளை வர்ணம்

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலுக்கு, இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள், வாகனங்களை நிறுத்திவிட்டு, கோவிலுக்கு நடந்து செல்ல வேண்டும். தார்ச்சாலை வசதி இருந்தாலும், வெட்ட வெளியில் உள்ளதால், வெயிலில் சூடேறி கொதித்தது. இதனால் வயதானவர்கள், குழந்தைகள் செருப்பு அணிய முடியாத நிலையில் நடக்க முடியாமல், சிரமப்பட்டனர். வெயில் தாக்கத்தை குறைக்கும் வகையில், கோவில் நிர்வாகம் சார்பில், கடந்த ஏப்., மாதம், அடர் வெள்ளை வர்ணம் அடிக்கப்பட்டது. இதனால் தாக்கம் குறைந்தது. பக்தர்களும் முகம் சுளிக்காமல் நடந்து சென்றனர். வெள்ளை வர்ணம் அழிந்த நிலையில், மீண்டும் அடர் வர்ணம் அடிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !