உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷீரடி சாய்பாபா கோயிலில் கும்பாபிேஷகம்

ஷீரடி சாய்பாபா கோயிலில் கும்பாபிேஷகம்

திருப்புத்துார்: திருப்புத்துார் சிங்கம்புணரி ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள ஷீரடி சாயி பாபா கோயிலில் நாளை கும்பாபிேஷகம் நடைபெறுகிறது. திருப்புத்துார் ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை சார்பில் திருப்பணிகள் நடந்தன.ஜூன் 7ல் யாகசாலை பூஜைகள் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் துவங்கின.நேற்று காலை 9:30 மணிக்கு வாஸ்து பூஜையுடன்யாகசாலை பூஜை துவங்கி மாலையில் முதற்கால யாக பூஜை நடந்தது. இன்றுகாலை 8:45 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை துவங்குகிறது. மாலையில் மூன்றாம் காலயாக பூஜை நடைபெறும்.தொடர்ந்து மூல ஸ்தானத்தில் ஷீரடி சாய்பாபா திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.நாளை காலை 7:15 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள் துவங்குகின்றன. தொடர்ந்து பூர்ணாகுதி,தீபாராதனை,கடம் புறப்பாடாகிகாலை 10:00 மணிக்கு கும்பாபிேஷகம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !