கண்ணமங்கலம் அருகே அக்னி வசந்தவிழா
ADDED :2695 days ago
கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அடுத்த, அனந்தபுரம் அருகேயுள்ள, கைலாசபுரத்தில் அக்னி வசந்த விழா நேற்று நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த, அனந்தபுரம் பஞ்.,க்கு உட்பட்ட கைலாசபுரம் கிராமத்தில், 11ம் ஆண்டு அக்னி வசந்த விழா கடந்த மே, 18ல், தொடங்கி நடந்து வருகிறது. தினமும், பகலில் மகாபாரத சொற்பொழிவு நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு துரியோதனன் படுகளமும், மாலை, 4:00 மணிக்கு தீமிதி விழாவும் நடந்தது. விழாவில் காளசமுத்திரம், படவேடு, கணேசபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். இன்று, தருமர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.