அமரம்பேடு கோவில் பராமரிக்கப்படுமா?
ADDED :2694 days ago
அமரம்பேடு: அமரம்பேடு கிராமத்தில், பழமை வாய்ந்த கோவில், மண்டபத்தை பராமரிக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஸ்ரீபெரும்புதுார் அருகே அமரம்பேடு ஊராட்சி உள்ளது. இங்கு, பழமை வாய்ந்த கரிய மாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. பராமரிப்பு இன்றி சிதலமடைந்து காணப்படும் இந்த கோவில் மீது, மரங்கள் வளர்ந்து உள்ளதால் பல இடங்களில் விரிசலுடன் காணப்படுகிறது. இதனால், கோவில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது போல், ஸ்ரீபெரும்புதுார் – -குன்றத்துார் நெடுஞ்சாலையோரம் அமரம்பேடு பகுதியில் பழமையான கோட்டை சிதிலமடைந்து காணப்படுகிறது. ஆற்காடு நவாப்களால் கட்டப்பட்ட இந்த கோட்டையை சீரமைத்து பராமரிக்க வேண்டும் என, அமரம்பேடு கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.