பழநியில் ‘ரோப்கார்’ சேவை பாதிப்பு
ADDED :2694 days ago
பழநி: பழநி முருகன்கோயில் ரோப்கார் பலத்த காற்றுவீசிய நேரங்களில் நிறுத்தப்பட்டதால், பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். காற்று குறைந்த நேரங்களில் மட்டும் இயங்கியது. ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு ரோப்காரில் பயணம் செய்ய குவிந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். வின்ச் ஸ்டேஷனில் நீண்டநேரம் காத்திருந்து சிரமப்பட்டனர். திண்டுக்கல் ரோடு, புதுதாராபுரம்ரோடு, உடுமலை ரோட்டில் குவிந்துள்ள பலத்தகாற்றில் மண் புழுதியாக பறந்ததால் வாகனஓட்டிகள் சிரமப்பட்டனர்.