உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) ஆன்மிகச் சுற்றுலா

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) ஆன்மிகச் சுற்றுலா

மனத்துணிவுடன் செயலில் ஈடுபடும் ரிஷப ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் 3-ல் உள்ள ராகு தொடர்ந்து நன்மை தருவார். ராசிக்கு 3-ல் இருக்கும்  சுக்கிரன்  மாதம் முழுவதும் அனுகூலம் தர காத்திருக்கிறார். ராகு 3-ம் இடமான கடகத்தில் இருப்பதால் அவரால் செயலில் வெற்றி,  பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழில் வளர்ச்சி உண்டாகும். ஆனால் சூரியனால் பொருள் விரயம் ஏற்படலாம்.
புதனால் அவப்பெயர் உருவாகலாம். செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.  ஜூன் 24க்கு பிறகு புதன் 3-ம் இடத்தில் இருப்பதால் பகைவரால் இடையூறு வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். குரு 6-ம் இடமான துலாம் ராசியில் இருப்பதால் மனதில் தளர்ச்சி ஏற்படலாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். சுபவிஷயம் பற்றிய பேச்சு நடந்தேறும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு உண்டு.  ஜூலை 9,10,11ல் பெண்கள்  உதவிகரமாக செயல்படுவர். ஜூலை 5,6 ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஜூன் 18,19,20, ஜூலை 16 ஆகிய தேதிகளில் உறவினர்கள் வகையில் வீண் விரோதம் வர வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். ஜூன் 16,17, ஜூலை 14,15ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.  ஜூலை 5க்கு பிறகு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும்.

குடும்பத்தோடு புனித தலங்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவீர்கள். புதிய வீடு, மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.  

பணியாளர்களுக்கு சுக்கிரனால் பதவி உயர்வு கிடைக்கும். இடமாற்ற பீதி மறையும். ஜூன் 24 க்கு பிறகு அரசு ஊழியர்கள் வேலையில் கவனமுடன் இருக்கவும். ஜூலை 2,3,4 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். ஜூலை 5க்கு பிறகு போலீஸ் மற்றும் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் வளர்ச்சி காண்பர் தொழிலதிபர்களுக்கு நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வர். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். சிலருக்கு வீண் மனக் கவலை வரலாம். ஜூன் 24க்கு பிறகு  பகைவர் வகையில் தொல்லை வரலாம். அரசாங்க வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஜூன் 9,10,11,16,17, ஜூலை 16ல்  சந்திரனால் தடைகள் வரலாம். ஜூன் 23,24ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  அரசியல் வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான வளர்ச்சி காண்பர். எதிர் பார்த்த பதவி கிடைக்க வாய்ப்பில்லை. சனி உங்கள் முயற்சி களில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். ஜூன் 21,22ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

விவசாயிகள் பழ வகைகள், பயறு வகைகள், எள், கரும்பு போன்ற பயிர்கள் மூலம் நல்ல வருமானம் காணலாம். ஜூலை 5க்கு பிறகு புதிய சொத்து வாங்க அனுகூலம் உண்டு.  வழக்கு, விவகாரத்தில்  சாதகமான முடிவு கிடைக்கும்.

மாணவர்களுக்கு பின்தங்கிய நிலை இருக்காது. ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு கைகொடுக்கும்.  தற்போது புதன் சாதகமாக இல்லாததால் போட்டிகளில் வெற்றி பெற விடா முயற்சி தேவைப்படும்.

பெண்கள் குதூகலமாக இருப்பர்.  ஜூன் 25,26 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருள் கிடைக்கும். அக்கம் பக்கத்தினரின்  தொல்லை மறையும். ஜூலை 5க்கு பிறகு பெண் காவலர்கள் சிலர் உயர் பதவி பெற வாய்ப்புண்டு.  
பெண்களை பங்குதாரராக கொண்ட வியாபாரம் சிறக்கும்.  பங்கு வர்த்தகம் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். சனியால் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு, கருத்து வேறுபாடும்
ஏற்படலாம். உடல்நலம் சீராக இருக்கும். ஆனால் கண் தொடர்பான பிரச்னை வரலாம்.

* நல்ல நாள்: ஜூன் 16,17,23,24,25,26, ஜூலை 2,3,4,5,6,9,10,11,14,15
* கவன நாள்: ஜூன் 27,28,29 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 5,6 நிறம்: வெள்ளை, நீலம்  

* பரிகாரம்:
● காலையில் சூரிய நமஸ்காரம்
● புதன்கிழமையில் குலதெய்வ வழிபாடு
● வியாழனன்று தட்சிணாமூர்த்திக்குஅர்ச்சனை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !