உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) குடும்பத்தில் குதூகலம்

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) குடும்பத்தில் குதூகலம்

பிறருக்கு தீங்கு நினைக்காத மிதுன ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் குரு, சுக்கிரன் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பர். சுக்கிரனின் பலத்தால் செயலில் வெற்றி கிடைக்கும். பொருளாதார வளம் சிறக்கும். ஜூன் 24 வரை  வீண் விரயம் ஏற்படலாம்.  சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அனாவசிய பேச்சை தவிர்க்கவும்.

குடும்பத்தில் 5-ம் இடத்தில் இருக்கும் குரு பகவானால் குதூகலம் உண்டாகும். திருமணம் போன்ற சுபவிஷய பேச்சு நடந்தேறும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொந்தபந்தங்களின் வருகை இருக்கும். பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். குறிப்பாக ஜூலை 12,13ல் அவர்களால் அதிக அனுகூலத்தைப் பெறலாம். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜூலை 7,8ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே  நேரம் ஜூன் 21,22ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று விலகி இருக்கவும். ஜூன் 18,19,20, ஜூலை 16ம் தேதிகளில் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.

பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் பணியாளர்கள் திடீர்  இடமாற்றத்திற்கு ஆளாவர். ஜூன் 24 க்கு பிறகு உங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஜூலை 5,6 ஆகிய தேதிகளில் அலுவலக ரீதியாக முன்னேற்ற மான சம்பவம் நடக்கும். ஜூலை 5 க்கு பிறகு பணியாளர்களுக்கு விண்ணப்பித்த சலுகை கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.

வியாபாரிகளுக்கு வருமானத்துக்கு குறை இருக்காது. அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். ஜூன் 24க்கு பிறகு வீண் செலவு ஏற்படலாம். எதிரிகளின் இடையூறை சந்திக்க வேண்டியதிருக்கும். வெளியூர் பயணம் அடிக்கடி மேற் கொள்வீர்கள். ஜூன் 16,17, ஜூலை 9,10,11,14,15 ல் சந்திரனால் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். ஜூன் 25,26ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்க வாய்ப்புண்டு. எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். ராகுவால் வெளியூர் வாசம் நிகழும்.

கலைஞர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். ரசிகர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் நற்பெயரோடு நல்ல பதவியும் கிடைக்க பெறலாம். புகழ் வளர்முகமாகவே இருக்கும். ஜூன் 23,24 ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் போட்டிகளில் வெற்றி காண்பது அரிது. ஆனால் முயற்சிக்கு ஏற்ப பலன் கிடைக்கும். குருவால் ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். விவசாயிகள் கால்நடை மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கப் பெறுவர். நெல்,சோளம், கடலை போன்ற பயிர்கள் வகையில் அதிக லாபம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க சிலகாலம் பொறுத்திருக்க நேரிடும். புதிய வழக்கு, விவகாரத்தில் சிக்க வேண்டாம்.

பெண்களால் குடும்பம் சிறந்து விளங்கும். ஜூன் 24 வரை புதனால் வீண்செலவு ஏற்படலாம். சுக்கிரனால் ஆடை, ஆபரணம் சேர வாய்ப்புண்டு. ஜூன் 27,28,29ல் பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்க பெறலாம். விருந்து விழா என சென்று வருவீர்கள். ஜூலை 5க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர்.

உடல்நிலை சுமாராக இருக்கும். உஷ்ண, பித்தம், மயக்கம், சளி
போன்ற உபாதைகள் ஏற்படலாம்.

* நல்ல நாள்: ஜூன் 18,19,20,25,26,27,28,29, ஜூலை 5,6,7,8,12,13,16
* கவன நாள்: ஜூன் 30, ஜூலை 1 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,8 நிறம்: மஞ்சள், வெள்ளை  

* பரிகாரம்:
● சூரியன், புதனுக்கு அர்ச்சனை
● செவ்வாயன்று முருகனுக்கு பாலபிேஷகம்
● காலையில் சூரிய நமஸ்காரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !