கன்னிமார் கோயிலில் மண்டல பூஜை நிறைவு
ADDED :2773 days ago
ராஜபாளையம்: ராஜபாளையம் தென்காசி ரோடு ராஜா ஊரணி அருகில் உள்ள கன்னிமார் கோயிலில் மண்டலாபிேஷகநிறைவு பூஜை நடந்தது.இதையொட்டி நேற்று காலை பல்வேறு வகை அபிேஷகம் நடந்தது. யாகசாலை பூஜைகள் நடந்து கன்னிமார் சுவாமிகளுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வழிபட்டு சென்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராஜபாளையம் மூதனுார் தாயாதியர் சார்பில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.