அங்காள பரமேஸ்வரி ஊஞ்சல் உற்சவம்
ADDED :3038 days ago
கடலுார்:சின்ன திராசு கிராமம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.