பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :2694 days ago
நாமக்கல்: நாமக்கல், பலப்பட்டரை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. அதையொட்டி ஒவ்வொரு நாளும் கட்டளைதாரர்கள் சார்பில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்படுகிறது. நேற்று, ஏ.எஸ்.,பேட்டையைச் சேர்ந்த ஒரு பிரிவு சார்பில், சிறப்பு அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதையொட்டி, ஏ.எஸ்.,பேட்டை செல்வ விநாயகர் மற்றும் பகவதி அம்மன் கோவிலில் இருந்து, பால் மற்றும் தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்ட பக்தர்கள், பலப்பட்டரை மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவில் வாணவேடிக்கையுடன் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவிவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.