முத்தாலம்மன் கோவிலில் 17ல் கும்பாபிஷேகம்
வாலாஜாபாத்:வாலாஜாபாத், முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம், 17ல் நடைபெற உள்ளது. வாலாஜாபாத் அருந்ததியர் தெருவில், முத்தாலம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள கோவில் வளாகத்தில், செல்வ விநாயகர், முனீஸ்வரர், வெள்ளையம்மன் பொம்மி சமேத, மதுரை வீரன், நவக்கிரஹ மூர்த்தி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. முத்தாலம்மன் மற்றும் பிற உற்சவ மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், 17ல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, இன்று காலை, 8:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜை துவங்குகிறது. நாளை காலை இரண்டாம் கால பூஜையும், மாலை, 5:00 மணி மூன்றாம் கால பூஜையும் நடைபெற உள்ளது. வரும், 17ல் காலை, 8:00 மணிக்கு நான்காம் கால பூஜையும், அதை தொடர்ந்து காலை, 9:45 மணி முதல், 11:00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி தனபால் குடும்பத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.