ருத்ராட்சம், ஸ்படிக மாலையின் பயன் என்ன?
ADDED :2780 days ago
இரண்டும் தெய்வ சக்தி மிக்கவை. நீராடியதும் திருநீறு பூசிய பின் அணிய வேண்டும். அணிபவர் இறை சிந்தனை, ஒழுக்கத்தை கடைப்பிடிப்பது அவசியம். இதனால் அறிவு கூர்மை பெறும். ரத்தக்கொதிப்பு, கோபம், மனஇறுக்கம் குறையும். உலக வாழ்வுக்கான பொருள், மறுவுலகத்திற்கான அருளை ருத்ராட்சத்தால் பெற முடியும். மோட்சம் தர வல்லது ஸ்படிக மாலை. மனப்பக் குவத்திற்கு ஏற்ப அணியலாம். ஒரே நேரத்தில் இரண்டையும் அணியலாம்.