பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி நாற்று நடவு விழா
ADDED :2689 days ago
பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆனி உற்சவ நாற்று நடவு விழா இன்று நடக்கிறது. கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், ஆனி உற்சவ நாற்று நடவு விழா சிறப்பாக நடக்கிறது. மழை வளம், இயற்கை வளம் பெற்று மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த விழா கொண்டாடப்படுகிறது. கடந்த, 11ம் தேதி நாற்றுவிடுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தொடர்ந்து நேற்று வரை தினமும் மாலை, நெல்நாற்றுக்கு பூஜை செய்விக்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று மதியம் கேதாரீஸ்வரர், பச்சைநாயகி அம்மனுடன் புறப்பட்டு, தேவேந்திர குல வேளாளர் மடத்தில் எழுந்தருளுகின்றனர். பின்னர், மடத்தில் முளை விட்ட நிலையில் உள்ள நாற்றுகளுக்கு, சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. மாலை 4:00 மணிக்கு ஆனி உற்சவ நாற்று நடவு விழா நடக்கிறது.