உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாயூரநாத சுவாமி கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம்

மாயூரநாத சுவாமி கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம்

ராஜபாளையம்: ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று காலை மாயூரநாதசுவாமி மற்றும் அஞ்சல் நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். காலை 11:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.


கொடி மரம் மற்றும் நந்தி பகவானுக்கு எண்ணெய், பால், தயிர், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தன. இரவு 7:15 மணிக்கு சுவாமி சப்பரத்தில் காட்சியளித்தார்.தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் விழாவில் சிம்மம், கற்பகதரு, பூதம், அன்னம், குதிரை வாகனங்களில் சுவாமி, அம்மன் உலா நடக்கும். முக்கிய விழாவான தேரோட்டம் ஜூன் 27 ல் கோயில் நிர்வாகம் சார்பில் நடைபெறுகிறது.-விழாக்காலங்களில் மாலை திருவாசகம் முற்றோதல், பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏற்பாடுகளை செயல் அலுவலர் பொறுப்பு நாராயணி, தக்கார் நாகராஜன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !