பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் நடராஜருக்கு அபிஷேகம்
ADDED :2832 days ago
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆனித்திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆனிஉத்திர தரிசனத்தை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன் கோயில் நடராஜர் சன்னதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நடராஜருக்கு பால், பன்னீர், தயிர், சந்தனம், பழங்கள் உள்ளிட்ட 16வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின் வெளிப்பிரகாரத்தை நடராஜர் திருவுலா வந்தார். சிறப்பு அலங்காரம்செய்யப்பட்டு நடராஜர், சிவகாமிஅம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. ஆனித்திருமஞ்சனத்தை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் நடராஜர், சிவகாமியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.