உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூன்று கோவில்களின் உண்டியல்கள் திறப்பு

மூன்று கோவில்களின் உண்டியல்கள் திறப்பு

ஈரோடு: ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் மற்றும் அதன் வகையறா கோவில்களான, கஸ்தூரி அரங்கநாதர், மகிமாலீஸ்வரர் கோவில் உண்டியல்கள், மூன்று மாதத்துக்கு ஒருமுறை, ஒரே சமயத்தில் திறந்து, காணிக்கை எண்ணப்படுகிறது. நேற்று முன் தினம், கோசாலை உண்டியல் உள்பட, 19 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில், 7.99 லட்சத்து, 620 ரூபாய், 81 கிராம் தங்கம், 208 கிராம் வெள்ளி செலுத்தப்பட்டிருந்தது. திருக்கோவில் பணியாளர், தன்னார்வலர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !