உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்கரத்தாழ்வார் திருநட்சத்திர விழா

சக்கரத்தாழ்வார் திருநட்சத்திர விழா

கோவை : கணபதியில் உள்ள வேணுகோபால சுவாமி கோவிலில், சக்கரத்தாழ்வார் திருநட்சத்திர விழா நாளை கொண்டாடப்படுகிறது. சத்தி ரோடு, கணபதி வேணுகோபால சுவாமி கோவிலில், சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இங்கு தினமும் பூஜைகள் நடந்து வருகின்றன. நாளை சக்கரத்தாழ்வார் திருநட்சத்திரம் முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதற்கான விழா, நேற்று காலை, கலசஸ்தாபனத்துடன் துவங்கியது; லட்சார்ச்சனையும் நடந்தது. இன்று காலை, 7:00 முதல் இரவு, 8:30 மணி வரை லட்சார்ச்சனை நடக்கிறது. சக்கரத்தாழ்வார் திருநட்சத்திரத்தையொட்டி, நாளை காலை, 7:00 மணிக்கு, சிறப்பு ேஹாமமும், 9:00 மணிக்கு, அபிஷேக பூஜையும், 10:00 மணிக்கு, சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !