உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜர் வீதியுலா

திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜர் வீதியுலா

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார்‚ கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில்‚ ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு‚ நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.


அட்ட வீரட்டானத்தில் ஒன்றான திருக்கோவிலுார்‚ கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில்‚ நேற்று ஆனி திருமஞ்சன விழா நடந்தது. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு‚ விக்னேஷ்வர பூஜை‚ புண்யாகவாசனம்‚ கலச ஸ்தாபனம்‚ பஞ்சாசன பூஜை‚ பஞ்சாவரன பூஜை‚ சிவகாமசுந்தரி சமேத நடராஜர்க்கு சிறப்பு அபிஷகம் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு‚ மூலமூர்த்திகளுக்கு மகா அபிஷகம்‚ அலங்காரம்‚ வசந்த மண்டபத்தில் நடராஜர்‚ சிவகாமசுந்தரி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சோட சோபவுபச்சார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி புறப்பாடாகி முக்கிய வீதிகள் வழியாக வலம்வந்தது. ஆலய வளாகத்தில் நடராஜர் திருவூடல் வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !