உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் கோலாகலம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் கோலாகலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று, ஆனி மாத உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு, சாய ரட்சை காலத்தில் திருமஞ்சனம் பூஜை நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, ஆயிரங்கால் மண்டபத்தில், சிவகாமசுந்தரி, நடராஜர் சிறப்பு அலங்காரத்தில், எழுந்தருளி பக்தர்களுக்கு, அருள்பாலித்தனர். நேற்று, காலை நடராஜருக்கு சிறப்பு அபி?ஷகம், அலங்காரம், 16 வகையான தீபாராதனை நடந்தது. பின், திருமஞ்சன கோபுரம் வழியாக புறப்பட்டு, சுவாமி மாட வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !