அனந்தீஸ்வரன் கோவிலில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம்
ADDED :2840 days ago
சிதம்பரம்: அனந்தீஸ்வரன் கோவிலில் நடராஜருக்கு நடந்த ஆனி திருமஞ்சன சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி சிறப்பு ேஹாமங்கள் நடைப்பெற்று, சிவகாம சுந்தரி அம்மன் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதனைத்தொடர்ந்து பன்னிருதிருமுறை பாடல்கள் பாடி மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி புறப்பாடு செய்து கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.