இன்று சுதர்ஸன (சக்கரத்தாழ்வார்) ஜெயந்தி
ADDED :2697 days ago
சக்கரம் என்னும் சுதர்ஸனம் எம்பெருமான் மகாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம்! அவர் தம் வலத் திருக்கரத்தில் ஏந்தியுள்ள சுதர்ஸனம், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறது. அனந்தன் என்ற நாகம், கருடன், சுதர்ஸனம் – இம்மூவரும் பகவானை ஒரு நொடி கூட பிரியாது அவரைத் தொழும் ‘நித்யசூரிகள்’. வைகுண்டத்தில் மஹாவிஷ்ணுவின் இருக்கையாகவும், பாற்கடலில் பாம்புப் படுக்கையாகவும், ஆதிசேஷனாக குடையாகவும், நடக்கையில் பாதுகையாகவும் இருப்பவர் அனந்தன். பகவான் மனதால் நினைத்தவுடன், நினைத்த இடத்திற்கு அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகவும், அவரது தாஸனாகவும் திகழ்பவர் கருடன்.
அமைதியும், ஆனந்தமும் கூடிய சுகவாழ்வு அமையும். புராணப் பெருமைகள் மிகுந்த, புராதனமான சில திருத்தலங்களில் – மதுரை அழகர் கோவில், திருமோகூர், ரங்கம், வில்லிபுத்தூர், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில், கும்பகோணம் சக்ரபாணி கோவில் ஆகியவை மிகுந்த விசேஷமானவர் சக்கரத்தாழ்வார். தென்திசையின் திலகமான திருமாலிருஞ்சோலையை வந்து சேவித்த பீஷ்மாச்சாரியார், ‘சங்க, சக்ர, கதா, கட்கி சார்ங்கதன்வா கதாதர’ என சகஸ்ரநாமத்தில் – கள்ளழகரான விஷ்ணுவைப் போற்றுகிறார். இங்கு பாதுகாப்பு கருதி மாலவனின் திருக்கர சக்கரம், தாயார் சன்னதிக்கு பின்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வேறெங்கும் இல்லாத தரிசனமாக ‘பிம்பரூபத்தில்’ மேற்புறம் ‘ஹிரண்ய சம்ஹார நரசிம்மர், கீழ்ப்புறம் வராக ஸ்வாமியாக சிறப்புடன் திகழ்கிறார். பக்த வாத்ஸல்யனான இவரை – மனம், வாக்கு, காயம் (உடல்) என ‘திரிகரண சுத்தியுடன் சுதர்ஸனரைப் பிரார்த்தித்து, நெய் விளக்கேற்றி வழிபட “நினைத்தது நிறைவேறும்!” சகல சுகங்களும் பெற்றுச் சிறக்கலாம். புதனும், சனியும் விசேஷம். முடிந்தால் தினமேயும், இயன்றதை நிவேதனம் செய்து, பூஜித்து, சேவிக்கலாம். தினமும், “ சுதர்ஸனாய ஹும்பட்” என்ற மந்திரத்தையும், “ஓம் ஸுதர்சனாய வித்மஹே மஹா ஜ்வாலாய தீமஹி, தந்நச் சக்ர ப்ரசோதயாத்,” என்ற சுதர்ஸன காயத்ரீயையும் ஜபிக்கலாம். இவ்விதம் வழிபட்டு வரம் பெறலாம். நிச்சயம் நினைத்தது நிறைவேறும்! சக்ரத்தாழ்வார் தன்னை நாடி வந்து வணங்குவோருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் தந்தருள்கிறார்! சக்கரத்தாழ்வாரையும், அவர் பின்புறமுள்ள நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சிணம் செய்தால், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும் அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். பதினாறு வகைச் செல்வங்களும், கிரக தோஷங்களும் நீங்கும்.