வேணுகோபால லட்சுமி சுவாமி கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா
ADDED :3032 days ago
கோவை: கோவை பெரிய கடைவீதி வேணுகோபால லட்சுமி சுவாமி (கெரடி கோவில்) கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி இன்று (ஜூன் 22 )காலை சுதர்சன ஹோமம் நடந்தது. சக்கரத்தாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.