திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்
ADDED :2838 days ago
திருவாலங்காடு: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில்ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, நடராஜ பெருமானுக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில், சிவபெருமான் திருநடனம் புரிந்த ஐந்து சபைகளில், முதல் சபை என்பதால், ரத்தினசபை என்றழைக்கப்படுகிறது. இக்கோவிலில் ஆனி உத்திரத்தை முன்னிட்டு, நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சர்வ அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.