உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் சுதர்சன ஏகதின லட்சார்ச்சனை

சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் சுதர்சன ஏகதின லட்சார்ச்சனை

உடுமலை;உடுமலை, சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் சுதர்சன ஏகதின லட்சார்ச்சனை நடந்தது.உடுமலை, நெல்லுக்கடை வீதி, சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வாருக்கு 44வது ஆண்டு லட்சார்ச்னை பூஜை நடந்தது. காலையில், நித்ய திருவாராதனத்துடன் லட்சார்ச்சனை துவங்கியது.காலை, 11:30 மணிக்கு சுதர்சன ஹோமம், மதியம், திருமஞ்சன அபிஷேகமும் நடந்தது. மாலை, 4:30 மணிக்கு லட்சார்ச்னை துவங்கியது. மாலையில், சக்கரத்தாழ்வாருக்கு வெள்ளிக் காப்பு அலங்கார சேவை நடத்தி, லட்சார்ச்சனை நிறைவு செய்யப்பட்டது. சுவாமிகளுக்கு மஹா தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !