நடனபாதேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2942 days ago
நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரத்தில் பழமையான ஹஸ்ததா ளாம்பிகை சமேத நடன பாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 17 ம் தேதி கொடியேற்றத் துடன் துவங்கியது.தினமும் சிறப்பு அபிஷேகமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா நடைபெற்று வருகிறது.நேற்று முன்தினம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு ஹஸ்ததாளாம்பிகை சமேத நடனபாதேஸ்வரர் திருக்கல்யாண உற்ச வத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இன்று காலை தேரோட் டமும், 29ம் தேதி தெப்பல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்து லட்சுமி, கணக்கர் சரவணன் செய்து வருகின்றனர்.