பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுதர்சன தன்வந்திரி ஹோமம்
ADDED :2700 days ago
விழுப்புரம்; விழுப்புரம் அடுத்த பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், சுவாதி சிறப்பு ஹோமம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி சுதர்சன தன்வந்திரி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது. சுவாதி உற்சவத்தையொட்டி, காலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு தங்க கவசம் அணிவித்து, தீபாராதனை நடந்தது. மூலவர் பெருமாள் தங்க கவசத்தில் தயாருடன் பக்தருக்கு அருள் பாலித்தார். ஹோமத்தில் உற்சவர் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.