பிரளயகாலேஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல்
ADDED :2694 days ago
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில், துாங்கானை மாடம் திருவாசகப் பேரவை சார்பில் திருவாசக முற்றோதல் பெருவிழா கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது.இதையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு பிரளயகாலேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிேஷகம், தொடர்ந்து, காலை 6:30 மணிக்கு கோவில் வளாகத்தில் இருந்து திருவாசகப் பாடல் பாடிக்கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். தொடர்ந்து, திருக்கழுக்குன்றம் சதாசிவ பரப்பிரம்ம சிவனடியார் திருக்கூட்டம் சிவ தாமோதரனின் திருவாசகப் பாடல் மற்றும் சொற் பொழிவு நடந்தது. இதில், சேலம், ஆத்துார், விருத்தாசலம், வாழப்பாடி, சிதம்பரம் உட்பட பல பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் பக்தி பரவசத்துடன் திருவாசகம் பாடினர்.