உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகு பார்வை பட்டாச்சு; ராஜ யோகம் வந்தாச்சு

ராகு பார்வை பட்டாச்சு; ராஜ யோகம் வந்தாச்சு

வெள்ளிக்கிழமை காலை 10:30 – 12:00 மணிக்குள்  ராகு காலத்தில் இந்த போற்றியை சொல்லி வழிபட்டால் அதிர்ஷ்ட கதவு திறக்கும்.

ஓம் அமரமுகனே போற்றி
ஓம் அரவ மேனியனே போற்றி
ஓம் அமுதுண்டவனே போற்றி
ஓம் அதிசய வடிவனே போற்றி
ஓம் அசுர குலனே போற்றி
ஓம் அசுப கிரகமே போற்றி
ஓம் அதமனே போற்றி
ஓம் அமுதகடிகன் தந்தையே போற்றி
ஓம் அஞ்சுதகு தோற்றனே போற்றி
ஓம் அண்டினோர்க்கு எளியனே போற்றி
ஓம் அஞ்சலி ஹஸ்தனே போற்றி
ஓம் அரசாள அருள்பவனே போற்றி
ஓம் அறுகு சமித்தனே போற்றி
ஓம் ஆழியால் அறுபட்டவனே போற்றி
ஓம் ஆடு வாகனனே போற்றி
ஓம் இரு வாகனனே போற்றி
ஓம் இரண்டானவனே போற்றி
ஓம் உக்கிரனே போற்றி
ஓம் உடலிழந்தவனே போற்றி
ஓம் உளுந்து விரும்பியே போற்றி
ஓம் ஊறு களைபவனே போற்றி
ஓம் எட்டாம் கிரகனே போற்றி
ஓம் எண்பரித் தேரனே போற்றி
ஓம் ஏடேந்தியவனே போற்றி
ஓம் ஏவல் குலைப்பவனே போற்றி
ஓம் கரு மேனியனே போற்றி
ஓம் கருநாக ராஜனே போற்றி
ஓம் கருக்கல் உலோகனே போற்றி
ஓம் கரியபாம்பு உடலோனே போற்றி
ஓம் கருங்குடையனே போற்றி
ஓம் கரிய உடையனே போற்றி
ஓம் கட்காயுதனே போற்றி
ஓம் கத்தி ஏந்தியவனே போற்றி
ஓம் கருஞ்சந்தனப் பிரியனே போற்றி
ஓம் கருநிறக் கொடியோனே போற்றி
ஓம் கருணை விழியனே போற்றி
ஓம் கருமலர்ப்பிரியனே போற்றி
ஓம் கால  ரூபனே போற்றி
ஓம் கிரஹ ராஜனே போற்றி
ஓம் கிரஹ பீடாஹரனே போற்றி
ஓம் கிரகண காரணனே போற்றி
ஓம் கேதுவின் பாதியே போற்றி
ஓம் கேதுக்கு அருகிருப்பவனே போற்றி
ஓம் கேடகாயுதனே போற்றி
ஓம் கோர ரூபனே போற்றி
ஓம் கோமேதகப் பிரியனே போற்றி
ஓம் சதய நாதனே போற்றி
ஓம் சனிக்கு உற்றவனே போற்றி
ஓம் சந்திரன் பகைவனே போற்றி
ஓம் சார்ந்து பலனளிப்பவனே போற்றி
ஓம் சிரஞ்சீவியே போற்றி
ஓம் சிம்ஹிகை புதல்வனே போற்றி
ஓம் சிங்க வாகனனே போற்றி
ஓம் சிங்கக் கொடியோனே போற்றி
ஓம் சிம்மாசனத்தில் இருப்பவனே போற்றி
ஓம் சுக்ரன் நண்பனே போற்றி
ஓம் சூரியனுக்கு ஆகானே போற்றி
ஓம் சூலாயுதனே போற்றி
ஓம் சூரியனை மறைப்பவனே போற்றி
ஓம் செங்கண்ணனே போற்றி
ஓம் செவ்வாய் விரதமேற்பவனே போற்றி
ஓம் தனி வீடிலானே போற்றி
ஓம் தவத்தாற் சிறந்தவனே போற்றி
ஓம் தமோ குணனே போற்றி
ஓம் தானவ மந்திரியே போற்றி
ஓம் திருவாதிரை நாதனே போற்றி
ஓம் தீவினையழிப்பவனே போற்றி
ஓம் தெற்கு நோக்கனே போற்றி
ஓம் தென்மேற்கு இருப்பவனே போற்றி
ஓம் தேரேறி வருபவனே போற்றி
ஓம் தேவனாய் நடித்தவனே போற்றி
ஓம் நாகம் ப்ரத்யதி தேவதையனே போற்றி
ஓம் நாற்கரனே போற்றி
ஓம் நிழற்கோளே போற்றி
ஓம் நெடிய உருவனே போற்றி
ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி
ஓம் பக்தருக்கு அருள்பவனே போற்றி
ஓம் பலமளிப்பவனே போற்றி
ஓம் பசு அதிதேவதையனே போற்றி
ஓம் பரனருள் பெற்றவனே போற்றி
ஓம் புராணனே போற்றி
ஓம் புளிப்புச் சுவையனே போற்றி
ஓம் பெண்பால் கிரகமே போற்றி
ஓம் பைடீனஸ கோத்ரனே போற்றி
ஓம் மந்தாரைப் பிரியனே போற்றி
ஓம் மாலருள் வாய்த்தவனே போற்றி
ஓம் மஹாபலனே போற்றி
ஓம் மாறிச் சுற்றுபவனே போற்றி
ஓம் முடிதரித்தவனே போற்றி
ஓம் முருகனை மகிழ்விப்பனே போற்றி
ஓம் முறப் பீடனே போற்றி
ஓம் மூவாறாண்டு ஆள்பவனே போற்றி
ஓம் மேருஇடம் வருபவனே போற்றி
ஓம் மோகினியால் அடிபட்டவனே போற்றி
ஓம் ரவிமதியை பீடிப்பவனே போற்றி
ஓம் ராகு காலனே போற்றி
ஓம் ருத்திரப் பிரியனே போற்றி
ஓம் வல்லவனே போற்றி
ஓம் வடுவுடை தேகனே போற்றி
ஓம் வரத ஹஸ்தனே போற்றி
ஓம் வரமளிப்பவனே போற்றி
ஓம் வாயுத்தலத்து அருள்பவனே போற்றி
ஓம் விப்பிரசித்தி மகனே போற்றி
ஓம் விடபயம் தீர்ப்பவனே போற்றி
ஓம் வெள்ளித் தேரனே போற்றி
ஓம் வெற்றி அளிப்பவனே போற்றி
ஓம் ‘க்லிம்’ பீஜ மந்திரனே போற்றி
ஓம் ராகு தேவனே போற்றி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !