உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவுடையம்மன் கோவிலில் கலச பூஜை விமரிசை

திருவுடையம்மன் கோவிலில் கலச பூஜை விமரிசை

மீஞ்சூர்: திருவுடையம்மன் திருமணங்கீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகம் முடிந்து, ஓராண்டு நிறைவு நாளையொட்டி, நவகலச சபன பூஜை சிறப்பாக நடைபெற்றது.மீஞ்சூர் அடுத்த, மேலுார் கிராமத்தில், திருவுடையம்மன் உடனுறை திருமணங்கீஸ்வரர் கோவில் உள்ளது. தனித்தனி சன்னதிகள் உள்ள இத்திருத்தலம், 1983ம் ஆண்டிற்கு பின், கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது.கோவில் திருப்பணிக் குழுவினர், உபயதாரர்கள் முயற்சியால், கோவிலில் திருப்பணிகள் முடிந்து, 35 ஆண்டுகளுக்குப் பின், கடந்த ஆண்டு, ஜூலை மாதம், கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்து, ஓராண்டு நிறைவு நாளையொட்டி, நேற்று, நவகலச சபன பூஜை சிறப்பாக நடைபெற்றது. காலை, 9:00 முதல், பகல், 12:00 மணி வரை விநாயகர் பூஜை, கும்ப அலங்காரம், சபன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகள் நடந்தன. திருவுடையம்மனுக்கும், திருமணங்கீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !