இரும்பை, கிளியனூரில் பிரதோஷ வழிபாடு
ADDED :2695 days ago
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு : திருச்சிற்றம்பலம், கிளியனுார், ஒழிந்தியாம்பட்டு ஆகிய பகுதியில், சிவ ஆலயங்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அடுத்த இரும்பை மாகாளீஸ்வரர், ஒழிந்தியாம்பட்டு அரசலீஸ்வரர், கிளியனுார் அகஸ்தீஸ்வரர் ஆகிய சிவ ஆலயங்களில் மாத பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது.மாலை 4.30 மணி முதல், 6.00 மணிக்கு வரை, சுவாமிக்கும், நந்திக்கும் பால், சந்தனம், தயிர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.