ஜெருசலேம் புனித பயணம் நிதியுதவி பெற வாய்ப்பு
சென்னை: ஜெருசலேம் புனித பயணத்திற்கு, நிதியுதவி பெற விரும்புவோர், ஜூலை, 6க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள், ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள, தமிழக அரசு சார்பில், தலா, 20 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப் படுகிறது. இந்தாண்டு, 10 நாட்கள் புனித பயணத்தை, அடுத்த மாதம் மேற்கொள்ள உத்தேசிக்கப் பட்டுள்ளது. இந்த பயணம், பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயோ சமுத்திரம் மற்றும் கிறிஸ்துவ மத தொடர்புடைய, பிற புனித தலங்களை உள்ளடக்கியது. தமிழக அரசின் நிதி உதவி பெற விரும்புவோர், விண்ணப்ப படிவங்களை, மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில், கட்டணமின்றி பெறலாம். இதற்கான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை, தீதீதீ.ஞஞிட்ஞஞிட்தீ.tண.ஞ்ணிதி.டிண என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.