காரைக்கால் மாங்கனி திருவிழா: பிஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு
ADDED :2695 days ago
காரைக்கால்: காரைக்கால் மாங்கனி திருவிழாவில் நேற்று இரவு பிஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழா நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை மற்றும் மாப்பிள்ளை அழைப்புடன் துவங்கியது.நேற்று காலை முக்கிய நிகழ்ச்சியான பரமதத்தர் மற்றும் காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபம் நடந்தது.அதைத்தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு பிஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு நடந்தது.இதில் மேளதாளம் முழுங்க பிஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்படும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.