நீதி
1. புதிய ஆத்திசூடி காப்பு-பரம்பொருள் வாழ்த்து ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்துமோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்;மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்உருவகத் தாலே உயர்ந்துண ராதுபலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்ஒன்றே:அதனியல் ஒளியுறும் அறிவாம்;அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம். நூல் அச்சம் தவிர்ஆண்மை தவறேல்.இளைத்தல் இகழ்ச்சிஈகை திறன்உடலினை உறுதிசெய் ஊண்மிக விரும்புஎண்ணுவது உயர்வுஏறுபோல் நடஐம்பொறி ஆட்சிக்கொள்ஒற்றுமை வலிமையாம். ஓய்தல் ஒழி.ஓளடதம் குறை.கற்றது ஒழுகு.காலம் அழியேல்.கிளைபல தாங்கேல். கீழோர்க்கு அஞ்சேல்.குன்றென நிமர்ந்து நில்.கூடித் தொழில் செய்.கெடுப்பது சோர்வுகேட்டிலும் துணிந்து நில். கைத்தொழில் போற்றுகொடுமையை எதிர்த்து நில்.கோல்கைக் கொண்டுவாழ்கவ்வியதை விடேல்.சரித்திரச் தேர்ச்சி கொள் சாவதற்கு அஞ்சேல்சிதையா நெஞ்சு கொள்.சீறுவோர்ச் சீறு.சுமையினுக்கு இளைத்திடேல்.சூரரைப் போற்று செய்வது துணிந்து செய்சேர்க்கை அழியேல்.சைகையில் பொருளுணர்.சொல்வது தெளிந்து சொல்சோதிடந் தளை யிகழ். சௌரியம் தவறேல்.ஞமலிபோல் வாழேல்.ஞாயிறு போற்றுஞிமறென இன்புறு.ஞெகிழ்வது அருளின். ஞேயம் காத்தல்செய்.தன்மை இழவேல்.தாழ்ந்து நடவேல்.திருவினை வென்று வாழ்.தீயோர்க்கு அஞ்சேல். துன்பம் மறந்திடுதூற்றுதல் ஒழி.தெய்வம் நீ என் றுணர்.தேசத்தைக் காத்தல் செய்.தையலை உணர்வு செய். தொன்மைக்கு அஞ்சேல்.தோல்வியில் கலங்கேல்.தவத்தினை நிதம் புரி.நன்று கருது.நாளெலாம் வினை செய்; நினைப்பது முடியும்நீதிநூல் பயில்.நுனியளவு செல்.நூலினைப் பகுத்துணர்.நெற்றி சுருக்கிடேல். நேர்படப் பேசு.நையப் புடை.நொந்தது சாகும்.நோற்பது கைவிடேல்.பணத்தினைப் பெருக்கு. பாட்டினில் அன்பு செய்.பிணத்தினைப் போற்றேல்.பீழைக்கு இடங்கொடேல்.புதியன விரும்பு.பூமி இழந்திடேல். பெரிதினும் பெரிது கேள்.பேய்களுக்கு அஞ்சேல்.கொய்மை இகழ்.போர்த் தொழில் பழகு.மந்திரம் வலிமை. மானம் போற்று.மிடிமையில் அழிந்திடேல்.மீளுமாறு உணர்ந்துகொள்.முனையிலே முகத்து நில்.மூப்பினுக்கு இடங் கொடேல். மெல்லத் தெரிந்து சொல்.மேழி போற்று.மொய்ம்புறத் தவஞ் செய்.மோனம் போற்று.மௌட்டியந் தனைக் கொல். யவனர்போல் முயற்சிகொள்.யாரையும் மதித்து வாழ்.யௌவனம் காத்தல் செய்.ரஸத்திலே தேர்ச்சிகொள்.ராஜஸம் பயில். ரீதி தவறேல்.ருசிபல வென்றுணர்.ரூபம் செம்மை செய்.ரேகையில் கனி கொல்.ரோதனம் தவிர். ரௌத்திரம் பழகு.லவம் பல வெள்ளமாம்.லாகவம் பியற்சி செய்.லீலை இவ் வுலகு.(உ)லுத்தரை இகழ். (உ)லோக நூல் கற்றுணர்.லௌகிகம் ஆற்று.வருவதை மகிழ்ந்துண்.வான நூற் பயிற்சி கொள்.விதையினைத் தெரிந்திடு. வீரியம் பெருக்குவெடிப்புறப் பேசு.வேதம் புதுமை செய்.வையத் தலைமை கொள்.வௌவுதல் நீக்கு. 2. பாப்பாப் பாட்டு ஓடி விளையாடு பாப்பா!-நீஓய்ந்திருக்க லாகாகது பாப்பா!கூடி விளையாடு பாப்பா!-ஒருகுழந்தையை வையாதே பாப்பா! 1 சின்னஞ் சிறுகுருவி போலே-நீதிரிந்து பறந்துவா பாப்பா!வன்னப் பறவைகளைக் கண்டு-நீமனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா! 2 கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக்கூட்டி விளையாடு பாப்பா!எத்தித் திருடுமந்தக் காக்காய்-அதற்குஇரக்கப் படவேணும் பாப்பா! 3 பாலைப் பொழிந்துதரும் பாப்பா!-அந்தப்பசுமிக நல்லதடி பாப்பா!வாலைக் குழைத்துவரும் நாய்தான்-அதுமனிதர்க்கு தோழனடி பாப்பா! 4 வண்டி இழுக்கும்நல்ல குதிரை,-நெல்லுவயலில் உழுதுவரும் மாடு,அண்டிப் பிழைக்கும் நம்மை,ஆடு,-இவைஆதரிக்க வேணுமடி பாப்பா! 5 காலை எழுந்தவுடன் படிப்பு-பின்புகனிவு கொடுக்கும்நல்ல பாட்டுமாலை முழுதும் விளையாட்டு-என்றுவழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா! 6 பொய்சொல்லக் கூடாது பாப்பா!-என்றும்புறஞ்சொல்ல லாகாது பாப்பா!தெய்வம் நமக்குத்துணை பாப்பா!-ஒருனதீங்குவர மாட்டாது பாப்பா! 7 பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்பயங்கொள்ள லாகாது பாப்பா!மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! 8 துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்சோர்ந்துவிட லாகாது பாப்பா!அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்அத்தனையும் போக்கிவிடும் பாப்பா! 9 சோம்பல் மிகக்கெடுதி பாப்பா!-தாய்சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!தேம்பி யழுங்குழந்தை நொண்டி,-நீதிடங்கொண்டு போராடு பாப்பா! 10 தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள்தாயென்று கும்பிடடி பாப்பா!அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம்ஆன்றோர்கள் தேசமடி பாப்பா! 11 சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே!-அதைத்தொழுது படித்திடடி பாப்பா!செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத்தினமும் புகழ்ந்திடடி பாப்பா! 12 வடக்கில் இமயமலை பாப்பா!-தெற்கில்வாழும் குமரிமுனை பாப்பா!கிடக்கும் பெரியகடல் கண்டாய்-இதன்கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா! 13 வேத முடையதிந்த நாடு,-நல்லவீரர் பிறந்ததிந்த நாடு;சேதமில் லாதஹிந்து ஸ்தானம்-இதைத்தெய்வமென்று கும்பிடடி பாப்பா! 14 சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்புநிறை உடையவர்கள் மேலோர். 15 உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம்உண்மையென்று தானறிதல் வேணும்;வயிர முடையநெஞ்சு வேணும்;-இதுவாழும் முறைமையடி பாப்பா! 16 3. முரசு வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே!வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே!நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே! 1. ஊருக்கு நல்லது சொல்வேன்-எனக்குண்மை தெரிந்தது சொல்வேன்;சீருக் கெல்லாம் முதலாகும்-ஒருதெவ்ம் துணைசெய்ய வேண்டும். 2. வேத மறிந்தவன் பாப்பான்,-பலவித்தை தெரிந்தவன் பார்ப்பான்,நீதி நிலைதவ றாமல்-தண்டநேமங்கள் செய்பவன் நாய்க்கன். 3. பண்டங்கள் விற்பவன் செட்டி-பிறர்பட்டினி தீர்ப்பவன் செட்டி.தொண்டரென் றோர்வகுப் பில்லை,-தொழில்சோம்பலைப் போல்இழி வில்லை. 4. நாலு வகுப்பும்இங் கொன்றே-இந்தநான்கினில் ஒன்று குறைந்தால்,வேலை தவறிச் சிதைந்தே-செத்துவீழ்ந்திடும் மானிடச் சாதி. 5. ஒற்றைக் குடும்பந் தனிலே-பொருள்ஓங்க வளர்ப்பவன் தந்தை;மற்றைக் கருமங்கள் செய்தே-மனைவாழ்ந்திடச் செய்பவள் அன்னை. 6. ஏவல்கள் செய்பவர் மக்கள்;-இவ்யாவரும் ஓர்குலம் அன்றோ!மேவி அனைவரும் ஒன்றாய்-நல்லவீடு நடத்துதல் கண்டோம். 7. சாதிப் பிரிவுக் சொல்லி-அதில்தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.நீதிப் பிரிவுகள் செய்வார்-அங்குநித்தமும் சண்டைகள் செய்வார். 8. சாதிக் கொடுமைகள் வேண்டாம்;-அன்புதன்னில் செழித்திடும் வையம்;ஆதர வுற்றிங்கு வாழ்வோம்;-தொழில்ஆயிரம் மாண்புறச் செய்வோம். 9. பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவிபேணி வளர்த்திடும் ஈசன்;மண்ணுக் குள்ளே சிலமூடர் நல்லமாத ரறிவைக் கெடுத்தார். 10. கண்கள் இரண்டில் ஒன்றைக்-குத்திகாட்சி கெடுத்திட லாமோ?பெண்க ளறிவை வளர்த்தால்-வையம்பெதைமை யற்றிடுங் காணீர். 11. தெய்வம் பலபல சொல்லிப் -பகைத்தீயை வளர்ப்பவர் மூடர்;உய்வதனைத்திலும் ஒன்றாய்-எங்கும்ஓர்பொரு ளானது தெய்வம். 12. தீயினைக் கும்பிடும் பார்ப்பார்,-நித்தம்திககை வணங்கும் துருக்கர்,கோயிற் சிலுவையின் முன்னே-நின்றுகும்பிடும் யேசு மதத்தார்: 13. யாரும் பணிந்திடும் தெய்வம்-பொருள்யாவினும் நின்றிடும் தெவ்ம்,பாருக்குள்ளே தெய்வம் ஒன்று;-இதில்பற்பல சண்டைகள் வேண்டாம். 14. வெள்ளை நிறத்தொரு பூனை-எங்கள்வீட்டில் வளருதுகண்டீர்;பிள்ளைகள் பெற்றதப் பூனை;-அவைபேருக் கொருநிற மாகும். 15. சாம்பல் நிறமொரு குட்டி;-கருஞ்சாந்து நிறமொரு குட்டி,பாம்பு நிறமொரு குட்டி,-வெள்ளைப்பாலின் நிறமொரு குட்டி. 16. எந்த நிறமிருந் தாலும்-அவையாவும் ஒரேதர மன்றோ?இந்த நிறம்சிறி தென்றும்-இஃதுஏற்ற மென்றும் சொல்லலாமோ? 17. வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்-அதில்மானுடர் வேற்றுமை யில்லை,எண்ணங்கள செய்கைக ளெல்லாம்-இங்குயாவர்க்கும் ஒன்றெனல் காணீர். 18. நிகரென்று கொட்டு முரசே!-இந்தநீணிலம் வாழ்பவ ரெல்லாம்;தகரென்று கொட்டு முரசே!-பொய்மைச்சாதி வகுப்பினை யெல்லாம். 19. அன்பென்று கொட்டு முரசே-அதில்ஆக்கமுண் டாமென்று கொட்டு;துன்பங்கள் யாவும் போகும்-வெறுஞ்சூதுப் பிரிவுகள் போனால். 20. அன்பென்று கொட்டு முரசே!-மக்கள்அத்தனை பேரும் நிகராம்;இன்பங்கள் யாவும் பெருகும்-இங்குயாவரும் ஒன்றென்று கொண்டால். 21. உடன்பிறந் தாக்ளைப் போல-இவ்வுலகில் மனிதரெல் லாரும்;இடம்பெரி துண்டுவை யத்தில்-இதில்ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்? 22. மரத்தினக நட்டவன் தண்ணீர்-நன்குவார்த்ததை ஓங்கிடச் செய்வான்;சிரத்தை யுடையது தெய்வம்,-இங்குசேர்ந்த உணவெலை யில்லை. 23. வயிற்றுக்குச் சொறுண்டு கண்டீர்!-இங்குவாழும் மனிதரெல் லோர்க்கும்;பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்!-பிறர்பங்கைத் திருடுதல் வேண்டாம். 24. உடன்பிறந் தவர்களைப் போலே-இவ்வுலகினில் மனிதரெல் லோரும்;திடங்கொண் டவர்மெலிந் தோரை-இங்குதின்று பிழைத்திட லாமோ? 25. வலிமை யுடையது தெய்வம்,-நம்மைவாழ்ந்திடச் செய்வது தெய்வம்;மெலிவுகண் டாலும் குழந்தை-தன்னைவீழ்த்தி மிதித்திட லாமோ? 26. தம்பிசற் றேமெலி வானால்-அண்ணன்தானடி மைகொள்ள லாமோ?செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி-மக்கள்சிற்றடி மைப்பட லாமோ? 27. அன்பென்று கொட்டு முரசே!-அதில்யார்க்கும் விடுதலை உண்டு;பின்பு மனிதர்க ளெல்லாம் கல்விபெற்றுப் பதம்பெற்று வாழ்வார். 28. அறிவை வளர்த்திட வேண்டும்-மக்கள்அத்தனை பேருக்கும் ஒன்றாய்;சிறியாரை மேம்படச் செய்தால்-பின்புதெய்வம் எல்லோரையும் வாழ்த்தும். 29. பாருக்குள் ளேசமத் தன்மை-தொடர்பற்றுஞ் சதோதரத் தன்மை,யாருக்கும் தீமைசெய் யாது-புவியெங்கும் விடுதலை செய்யும். 30. வயிற்றுக்குச் சோறிட வேண்டும்-இங்குவாழும் மனிதருக் கெல்லாம்;பயிற்றிப் பலகல்வி தந்து-இந்தப்பாரை உயர்த்திட வேண்டும். 31. ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில்ஓங்கென்று கொட்டு முரசே!நன்றென்று கொட்டு முரசே!-இந்தநானில மாந்தருக் கெல்லாம். 2. சமூகம் 1. புதுமைப் பெண் போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி!நின்பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றி காண்!சேற்றி லேபுதி தாக முளைத்த தோர்செய்ய தாமரைத் தேமலர் போலொளிதோற்றி நின்றனை பாரத நாட்டிலே;துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகைசாற்றி வந்தனை,மாதரசே!எங்கள்சாதி செய்த தவப்பயன், வாழி நீ! 1 மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்நாதந் தானது நாரதர் வீணையோ?நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியேமேன்மை செய்தெமைக் காத்திடச் சொலவதோ?சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ?தையல் வாழ்கபல் லாண்டுப்ல லாண்டிங்கே! 2 அறிவு கொண்ட மனித வுயிர்களைஅடிமை யாக்க முயல்பவர் பித்தராம்;நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்தீயி லிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ! 3 ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;ஞான நல்லறம் வீர சுதந்திரம்பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ! 4 நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;நீசத் தொண்டும் மடமையும் கொண்டதாய்தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்சால வேயரி தாவதொர் செய்தியாம்;குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம்;கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;நங்கை கூறும் வியப்புக்கள் கேட்டிரோ! 5 புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்சதும றைப்படி மாந்தர் இருந்தநாள்தன்னி லேபொது வான வழக்கமாம்;மதுரத் தேமொழி மங்கைய் உண்மைதேர்மாத வப்பெரி யோருட னொப்புற்றேமுதுமைக் காலத்தில் வேதங்கள் பேசியமுறைமை மாறிடக் கேடு விளைந்ததாம். 6 நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்அவல மெய்திக் கலையின் றி வாழ்வதைஉமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்உதய கன்ன உரைப்பது கேட்டிரோ! 7 உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,ஓது பற்பல நூல்வகை கற்கவும்,இலகு சீருடை நாற்றிசை நாடுகள்யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கேதிலக வாணுத லார்நங்கள் பாரததேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்;விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதைவீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம். 8 சாத்தி ரங்கள் பலபல கற்பராம்;சவுரி யங்கள் பலபல செய்வராம்;மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்;மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;காத்து மானிடர் செய்கை யனைத்தையும்கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ; 9 போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப்புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!மாற்றி வையம் புதுமை யுறச்செய்துமனிதர் தம்மை அமரர்க ளாக்கவேஆற்றல் கொண்ட பராசக்தி யன்னை,நல்அருளி னாலொரு கன்னிகை யாகியேதேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.! 10 2. பெண்கள் வாழ்க! பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தனதாயின் பேரும் சதியென்ற நாமமும். 1 அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்.ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்.துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!சூரப் பிள்ளைகள் தாயென் றும் போற்றுவோம். 2 வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்கலிய ழிப்பது பெண்க ளறமடா!கைகள் கோர்த்துக் களிப்பதுநின் றாடுவோம். 3 பெண்ண றத்தின ஆண்மக்கள் வீரந்தான்பேணு மாயின் பிறகொரு தாழ்வில்லை;கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவேகாத லின்பத்தைக் காத்திடு வோமடா! 4 சக்தி யென்ற மதுவையுண் போமடா!தாளங் கொட்டித் திசைகள் அதிரனேவ,ஒத்தி யல்வதொர் பாட்டும் குழல்களும்ஊர்வி யக்கக் கவித்துநின் றாடுவோம். 5 உயிரைக் காக்கும்,உயிரினைச் சேர்த்திடும்;உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா!ஊது கொம்புகள்,ஆடு களிகொண்டே 6 போற்றி தாய் என்று தோள்கொட்டி யாடுவீர்புகழ்ச்சி கூறுவிர் காதற் கிளிகட்கே,நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே. 7 போற்றி தாய் என்று தாளங்கள் கொட்டடா!போற்றி தாய் என்று பொற்குழ லூதடா!காற்றி லேறியவ விண்ணையுஞ் சாடுவோம்காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே 8 அன்ன மூட்டிய தெய்வ மணிக்கையின்ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்;கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம். 9 3. பெண்கள் விடுதலைக் கும்மி காப்புபெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்பேசிக் களிப்பொடு நாம்பாடக்கண்களி லேயொளி போல வுயிரில்கலந்தொளிர் தெய்வம் நற் காப்பாமே. 1. கும்மி யடி!தமிழ் நாடு முழுதும்குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!நம்மைப் பிடித்த பிசாசுகள் போயினநன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி) 2. ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்றவிந்தை மனிதர் தலைகவிழ்ந்தார். (கும்மி) 3. மாட்டையடித்து வசக்கித் தொழுவினில்மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதைவெட்டிவிட் டோமென்று கும்மியடி! (கும்மி) 4. நல்ல விலைகொண்டு நாயை விற்பார்,அந்தநாயிடம் யோசனை கேட்பதுண்டோ?கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலைகூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார். (கும்மி) 5. கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இருகட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;வ்ற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம். (கும்மி) 6. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்இளைப்பில்லை காணென்று கும்மியடி! (கும்மி) 7. வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்வேண்டி வந்தோ மென்று கும்மியடி!சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்சாதி படைக்கவும் செய்திடுவோம். (கும்மி) 8. காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்காரியம் யாவினும் கைகொடுத்து,மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்மாட்சி பெறச்செய்து வாழ்வமடி! (கும்மி) 4. பெண் விடுலை விடுத லைக்கு மகளிரெல் லோரும்வேட்கை கொண்டனம்; வெல்லுவம் என்றேதிடம னத்தின் மதுக்கிண்ண மீதுசேர்ந்து நாம்பிர திக்கினை செய்வோம்.உடைய வள்சக்தி ஆண்பெண் ணிரண்டும்ஒருநி கர்செய் துரிமை சமைத்தாள்;இடையி லேபட்ட கீழ்நிலை கண்டீர்,இதற்கு நாமொருப் பட்டிருப் போமோ? 1 திறமை யால்இங்கு மேனிலை சேர்வோம்;தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்;குறைவி லாது முழுநிகர் நம்மைக்கொள்வ ராண்க ளெனிலவ ரோடும்சிறுமை தீரநந் தாய்ததிரு நாட்டைத்திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம்;அறவி ழுந்தது பண்டை வழக்கம்;ஆணுக் குப்பெண் விலங்கெனும் அஃதே. 2 விடியும் நல்லொளி காணுதி நின்றே,மேவு நாக ரிகம்புதி தொன்றே;கொடியர் நம்மை அடிமைகள் என்றேகொண்டு, தாம் முதல் என்றன ரன்றே?அடியோ டநத் வழக்கத்தைக் கொன்றே,அறிவு யாவும் பயிற்சியில் வென்றேகடமை செய்விர்நந் தேசத்து வீரக்காரி கைக்கணத் தீர்,துணி வுற்றே. 3 5. தொழில் இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!யந்தி ரங்கள் வகுத்திடு வீரே!கரும்பைச் சாறு பிழிந்திடு வீரேகடலில் மூழ்கிநன் முத்தெடுப் பீரே!அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்ஆயி ரந்தொழில் செய்திடு வீரே!பெரும்பு கழ்நுமக் கேயிசைக் கின்றேன்பிரம தேவன் கலையிங்கு நீரே! 1 மண்ணெ டுத்துக் குடங்கள்செய் வீரே!மரத்தை வெட்டி மனைசெய்கு வீரே!உண்ணக் காய்கனி தந்திடு வீரே!உழுது நன்செய்ப் பயிரிடு வீரே!எண்ணெய் பால்நெய் கொணர்ந்திடு வீரே!இழையை நூற்றுநல் லாடைசெய் வீரே!விண்ணி னின்றெமை வானவர் காப்பார்!மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே! 2 பாட்டும் செய்யுளும் கோத்திடு வீரே!பரத நாட்டியக் கூத்திடு வீரே!காட்டும் வையப் பொருள் களின் உண்மைகண்டு சாத்திரம் சேர்த்துட வீரே!நாட்டி லேயறம் கூட்டிவைப் பீரே!நாடும் இன்பங்கள் ஊட்டி வைப்பீரே!தேட்ட மின்றி விழியெதிர் காணும்தெய்வ மாக விளங்குவிர் நீரே! 3 6. மறவன் பாட்டு மண்வெட்டிக் கூலிதின லாச்சே!-எங்கள்வாள்வலியும் வேல்வலியும் போச்சே!விண்முட்டிச் சென்றபுகர் போச்சே!இந்தமேதினியில் கெட்டபெய ராச்சே! 1 நாணிலகு வில்லினொடு தூணி-நல்லநாதமிகு சங்கொலியும் பேணி,பூணிலகு திண்கதையும் கொண்டு,-நாங்கள்போர்செய்த காலமெல்லாம் பண்டு. 2 கன்னங் கரியவிருள் நேரம்-தில்காற்றும் பெருமழையும் சேரும்;சின்னக் கரியதுணி யாலே எங்கள்தேகமெல்லாம் மூடிநரி போலே, 3 ஏழை யெளியவர்கள் வீட்டில்-இந்தஈன வயிறுபடும் பாட்டில்,கோழை யெலிக ளென்னவே-பொருள்கொண்டு வந்து... ... ... 4 முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் ஓதுவார்மூன்றுமழை பெய்யுமடா மாதம்;இந்நாளி லேபொய்மைப் பார்ப்பார்-இவர்ஏதுசெய்தும் காசுபெறப் பார்ப்பார்! 5 பேராசைக் காரனடா பார்ப்பான்-ஆனால்பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்;யாரானா லும்கொடுமை... ... ...... ... ... ... ... ... ... 6 பிள்ளைக்குப் பூணூலாம் என்பான்-நம்மைப்பிச்சுப் பணங்கொடெனத் தின்பான்;கொள்கைக் கேகென்................ ... ... ... ... ... ... 7 சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்-வெறுஞ்சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?... ... ... ... ... ... ...... ... ... ... ... ... ... 8 நாயும் பிழைக்கும் இந்தப்-பிழைப்புநாளெல்லாம் மற்றி திலே உழைப்பு;பாயும் கடிநாய்ப் போலீசுக்-காரப்பார்ப்பானுக் குண்டிதிலே பீசு. 9 சோரந் தொழிலாக் கொள்வோமோ?-முந்தைச்சூரர் பெயரை அழிப்போமோ?வீர மறவர் நாமன்றோ?-இந்தவீண்வாழ்க்கை வாழ்வதினி நன்றோ? 10 7. நாட்டுக் கல்வி (ஆங்கிலத்தில் ரவீந்திரநாதர் எழுதிய பாடலின் மொழிபெயர்ப்பு) விளக்கி லேதிரி நன்கு சமைந்ததுமேவு வீர்இங்கு தீக்கொண்டு தோழரே!களக்க முற்ற இருள்கடந் தேகுவார்காலைச் சோதிக் கதிரவன் கோவிற்கே;துளக்க முற்றவிண் மீனிடம் செல்லுவார்தொகையில் சேர்ந்திட உம்மையும் கூவினார்;களிப்பு மிஞ்சி ஒளியினைப் பண்டொருகாலம் நீர் சென்று தேடிய தில்லையோ? 1 அன்று நுங்கள் கொடியினை முத்திட்டேஆசை யென்றவிண் மீன்ஒளிர் செய்ததே;துன்று நள்ளிருள் மாலை மயக்கத்தால்,சோம்பி நீரும் வழிநடை பிந்தினீர்;நின்ற விந்தன நுங்கள் விளக்கெலாம்;நீங்கள் கண்ட கனாக்களெல் லாம்இசைகுன்றித் தீக்குறி தோன்றும்;இராப்புட்கள்கூவு மாறொத் திருந்தன காண்டிரோ? 2 இன்னு மிங்கிருள் கூடி யிருப்பினும்ஏங்கு கின்ற நரகத் துயிர்கள்போல்இன்னு மிங்கு வனத்திடை காற்றுத்தான்ஓங்கும் ஓதை இருந்திடும் ஆயினும்முன்னைக் காலத்தின் நின்றெழும் பேரொலிமுறைமு றைபல ஊழியின் ஊடுற்றேபின்னை இங்குவந் தெய்திய பேரொலிபோல மந்திர வேதத்தின் பேரொலி.இருளை நீக்கி ஒளியினைக் காட்டுவாய்,இறப்பை நீக்கி, அமிர்தத்தை ஊட்டுவாய்அருளும் இந்த மறையொலி வந்திங்கேஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்திருப் பீர்தமைத்தெருளு றுத்தவும் நீர்எழு கில்லிரோ?தீய நாச உறக்கத்தில் வீழ்ந்தநீர்மருளை நீக்கி அறிதிர் அறிதிரோ?வான்ஒ ளிக்கு மகாஅர்இ யாம்என்றே. 3 8. புதிய கோணங்கி குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;நல்லகாலம் வருகுது;நல்லகாலம் வருகுது;சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது;சொல்லடி,சொல்லடி,சக்தி,மாகாளீ!வேதபுரந் தாருக்கு நல்ல குறி சொல்லு. 1 தரித்திரம் போகுது;செல்வம் வருகுது;படிப்பு வளருது;பாவம் தொலையுது;படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்போவான்,போவான்,ஐயோவென்று போவான். 2 வேத புரத்திலே வியாபாரம் பெருகுது;தொழில் பெருகுது;தொழிலாளி வாழ்வான்;சாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது;யந்திரம் பெருகுது; தந்திரம் வளருது;மந்திர மெல்லாம் வளருது,வளருது, 3 குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;சொல்லடீ சொல்லடி,மலையாள பகவதீ!அந்திரி,வீரி,சண்டிகை சூலி!குடுகுடு குடுகுடு. 4 குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது;தொப்பை சுருங்குது;சுறுசுறுப்பு விளையுது;எட்டு லச்சுமியும் ஏறி வளருது;பயந் தொலையுது,பாவந் தொலையுது,சாத்திரம் வளருது, சாதி குறையுது;நேத்திரம் திறக்குது,நியாயம் தெரியுது;பழைய பயித்தியம் படீலென்று தௌயுது;வீரம் வருகுது,மேன்மை கிடைக்குது;சொல்லடீ சக்தி,மலையாள பகவதீ!தர்மம் பெருகுத,தர்மம் பெருகுது. 5