பாண்டீஸ்வர சுவாமி கோவில் ஆண்டு விழா
ADDED :2699 days ago
பொங்கலுார்:பொங்கலுார் அருகே பெருந்தொழுவு பர்வதநாயகி உடனமர் பாண்டீஸ்வரசுவாமி கோவில் கும்பாபிஷேக நான்காம் ஆண்டு விழா நடந்தது. விழாவையொட்டி, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனை, ருத்ர ஹோமம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை, மகா அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. பெருந்தொழுவு வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, பாண்டீஸ்வர சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் திருப்பணிக்குழு தலைவர் சின்னப்பன் மற்றும் ஊர்பொதுமக்கள் பங்கேற்றனர்.