சங்கரலிங்க சுவாமி குருபூஜை விழா
ADDED :2699 days ago
ஆத்தூர்: ஆத்தூர், தெற்குகாடு, கோவர்த்தனகிரி மலையடிவாரத்தில், ஸ்ரீலஸ்ரீவிவேகானந்தா சுவாமிகள் ஆசிரமம் உள்ளது. அங்கு, ஸ்ரீசங்கரலிங்க சுவாமிகளின், 21ம் ஆண்டு குருபூஜை விழா, நேற்று நடந்தது. அதை முன்னிட்டு, உலக அமைதி, நாட்டின் வளர்ச்சி வேண்டி வேள்வி பூஜை, 108 சங்காபி ?ஷகம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, ஒரு கோடி மலர்களால் லட்சார்ச்சனை, பக்தி சொற்பொழிவு நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.