பழநி முருகன் உண்டியலில் ரூ.1.51 கோடி வசூல்
ADDED :2699 days ago
பழநி: பழநி முருகன் கோவில் உண்டியலில், 21 நாட்களில், ஒரு கோடியே, 51 லட்சத்து, 53 ஆயிரம் ரூபாய் வசூலானது. கார்த்திகை மண்டபத்தில் நடந்த உண்டியல் எண்ணிக்கையில், தங்கம், 732 கிராம், வெள்ளி, 7,108 கிராம், வெளிநாட்டு கரன்சிகள், 1,237, ரொக்கமாக, ஒரு கோடியே, 51 லட்சத்து, 53 ஆயிரத்து, 50 ரூபாய் கிடைத்தது. இன்று, உபகோவில்களில், உண்டியல் எண்ணிக்கை நடக்கிறது.