மும்பையில் வட் சாவித்ரி விழா: பெண்கள் நேர்த்திக்கடன்
ADDED :2699 days ago
மும்பை: திருமணமான பெண்கள், தங்கள் கணவர் நலனுக்காக, பவுர்ணமி அன்று வழிபடும், ‘வட் சாவித்ரி’ விழா, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நேற்று நடந்தது. வட் சாவித்ரி பூஜா பண்டிகையையொட்டி ஏராளமான பெண்கள் தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ ஆலமரத்திற்கு கயிறு கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.