காஞ்சிபுரம் கோவில்களில் உண்டியல் வருவாய் ரூ.30 லட்சம்
ADDED :2700 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் மற்றும் கச்சபேஸ்வரர் கோவில்களில், 29.88 லட்சம் ரூபாய் உண்டியல் வசூல் கிடைத்துள்ளது. வரதராஜ பெருமாள் கோவிலில், திருவள்ளூர் உதவி ஆணையர், ஜான்சிராணி, செயல் அலுவலர் (பொறுப்பு), ந.தியாகராஜன், ஆய்வாளர், அலமேலு முன்னிலையில் உண்டியல் எண்ணப்பட்டது. இதில், 26 லட்சத்து, 35 ஆயிரத்து, 896 ரூபாய், 54 கிராம் தங்கம், 330 கிராம் வெள்ளி கிடைத்தது. அதுபோல, கச்சபேஸ்வரர் கோவிலில், உதவி ஆணையர் க.ரமணி, செயல் அலுவலர், சு.ராமகிருஷ்ணன், ஆய்வாளர், ஜெ.சுரேஷ்குமார் முன்னிலையில், உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதில், 3 லட்சத்து, 52 ஆயிரத்து, 740 ரூபாய், 13 கிராம் தங்கம், 58 கிராம் வெள்ளி கிடைத்தது. இரு கோவில்களிலும், மொத்தம், 29 லட்சத்து, 88 ஆயிரத்து, 636 ரூபாய் காணிக்கையாக கிடைத்தது.