உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ விநாயகர், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

செல்வ விநாயகர், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

அவிநாசி : அவிநாசி அருகே மடத்துப்பாளையம்,ஸ்ரீ செல்வ விநாயகர்,ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நடந்தது.கோவில், புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக யாக சாலை பூஜைகள், கடந்த, 22ல் துவங்கியது. யாக சாலையில் நான்கு கால பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அதன்பின், மகா கும்பாபிஷேகம் மற்றும் மகா அபிஷேகம், அலங்கார பூஜை, தச தானம், தச தரிசனம் நடந்தது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேக பூஜை களை, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அன்புகிருபாகர சுப்ரமணிய குருக்கள் தலைமையில், சிவாச்சார்யார் மேற்கொண்டனர். மண்டலாபிஷேக பூஜை, 48 நாட்கள், தினமும், தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !