உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா

பெரியசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா

கொடுமுடி: கொடுமுடி, சின்னாக்கண்டனூரில் பெரமனார் பெரியசாமி, செட்டிப்பெண் தைலாம்பிகை பூங்காவனத்தான் கோவில் உள்ளது. இங்கு கும்பாபிஷேக விழாவுக்காக, திருப்பணி நடந்தது. நிறைவடைந்த நிலையில், மஹா கும்பாபிஷேக விழா, தண்டபாணி குருக்கள் தலைமையில் நேற்று நடந்தது. முன்னதாக அதிகாலையில், கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, கும்ப ஸ்தாபனம், பூர்ணாஹூதி, கும்ப அபிஷேகம் நிகழ்வு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !