தீவனூர் விநாயகர் கோவிலில் சங்கட ஹர சதுர்த்தி ஏற்பாடு
ADDED :2701 days ago
திண்டிவனம்: தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் நாளை மறுநாள் (1ம் தேதி) சங்கட ஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. திண்டிவனம் அடுத்த தீவனூரில் பொய்யாமொழி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் சங்கட ஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். வரும் ஜூலை 1ம் தேதியன்று, சங்கட ஹர சதுர்த்தியை முன்னிட்டு, சுயம்பு பொய்யாமொழி விநாயகருக்கு சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவையொட்டி மாலை 5:00 மணிக்கு கணபதி ஹோமமும், 108 சங்காபிஷேகமும் நடக்கிறது. இதன் தொடர்ச்சியாக 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.