உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் கூடுதல் மெட்டல் டிடெக்டர் பணி

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் கூடுதல் மெட்டல் டிடெக்டர் பணி

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடுதல் மெட்டல்டிடெக்டர் பொருத்தும்பணி துவங்கியுள்ளதால், விரைவில் ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப் பட உள்ளனர்.ஆண்டாள் சன்னதியின் நுழைவுவாசல் மற்றும் வடபத்ரசயனர் சன்னதியின் தெற்கு வாசல் பகுதியில் இரு மெட்டல்டிடெக்டர் மட்டும் நிறுவப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப் பட்டனர். அரசின் முத்திரை சின்னமான வடபத்ரசயனர் கோயிலின் பிரதான ராஜகோபுரத்தின் வாசலில் மெட்டல்டிடெக்டர் பொருத்தப்படாததால், பக்தர்கள் அனுமதிக்கப்படாதநிலை இருந்தது.இந்நிலையில் ராம்கோ நிறுவனம் சார்பில் இரு நவீன மெட்டல்டிடெக்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று ஆண்டாள்கோயில் வாசலில் நிறுவப்பட்டுள்ளநிலையில், மற்றொன்று ராஜகோபுரத்தின் நுழைவுவாசலில் பொருத்தும் பணி துவங்கிஉள்ளது. பக்தர்களை சோதித்து அனுப்பும்வகையில், அங்கு தனிமையம் கட்டப்பட்டு வருகிறது. இருவாரத்திற்குள் பணிகள் முடிந்து, ராஜகோபுரத்தின் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !