மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
4980 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
4980 days ago
பல்லவி இனிஒரு தொல்லையும் இல்லை-பிரிவில்லை,குறையும் கவலையும் இல்லை (இனி) ஜாதி மனிதரில் ஆயிரம் ஜாதி-என்றவஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை;கனிதரும் மாமரம் ஒன்று-அதில்காய்களும் பிஞ்சுக் கனிகளும் உண்டு. 1 பூவில் உதிர்வதும் உண்டு-பிஞ்சைப்பூச்சி அரித்துக் கெடுவதும் உண்டுநாவிற் கினியதைத் தின்பார்-அதில்நாற்பதி னாயிரம் சாதிகள் சொல்வார். 2 ஒன்றுண்டு மானிட சாதி-பயின்றுஉண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்;இன்று படுத்தது நாளை-உயர்ந்தேற்றம் அடையும் உயர்ந்த திழியும். 3 நந்தனைப் போல்ஒரு பார்ப்பான்-இந்தநாட்டினில் இல்லை;குணம் நல்லதாயின்,எந்தக் குலத்தின ரேனும்-உணர்வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம். 4 இன்பத்திற்கு வழி ஐந்து புலனை அடக்கி-அரசுஆண்டு மதியைப் பழகித் தெளிந்து,நொந்து சலிக்கும் மனதை-மதிநோக்கத்திற் செல்ல விடும்பகை கண்டோம். 5 புராணங்கள் உண்மையின் பேர்தெய்வம் என்போம்-அன்றிஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்உண்மைகள் வேதங்கள் என்போம்-பிறிதுஉள்ள மறைகள் கதையெனக் கண்டோம். 6 கடலினைத் தாவும் குரவும்-வெங்கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்வந்து சமன்செயும் குட்டை முனியும், 7 நதியி னுள்ளேமுழு கிப்போய்-அந்தநாகர் உலகிலோர் பாம்பின் மகளைவிதியுற வேமணம் செய்த-திறல்வீமனும் கற்பனை என்பது கண்டோம். 8 ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும்-ஒன்றில்உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்நன்று புராணங்கள் செய்தார்-அதில்நல்ல கவிதை பலபல தந்தார். 9 கவிதை மிகநல்ல தேனும்-அக்கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;புவிதனில் வாழ்நெறி காட்டி-நன்மைபோதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம். 10 ஸ்மிருதிகள் பின்னும்(ஸ்)மிருதிகள் செய்தார்-அவைபேணும் மனிதர் உலகினில் இல்லை;மன்னும் இயல்பின வல்ல-இவைமாறிப் பயிலும் இயல்பின ஆகும். 11 காலத்திற் கேற்ற வகைகள்-அவ்வக்காலத்திற் கேற்ற ஒழுக்கமும் நூலும்ஞால முழுமைக்கும் ஒன்றாய்.எந்தநாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை 12 சூத்திர னுக்கொரு நீதி-தண்டச்சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி;சாத்திரம் சொல்லிடு மாயின்-அதுசாத்திரம் அன்று சதியென்று கண்டோம். 13 மேற்குலத்தார் எவர்?வையகம் காப்பவ ரேனும்-சிறுவாழைப் பழக்கடை வைப்பவ ரேனும்,பொய்யக லத்தொழில் செய்தே-பிறர்போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர். 14 தவமும் யோகமும் உற்றவர் நாட்டவர் ஊரார் -இவர்க்குஉண்மைகள் கூறி இனியன செய்தல்நற்றவம் ஆவது கண்டோம்-இதில்நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை. 15 பக்கத் திருப்பவர் துன்பம்-தன்னைப்பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி;ஒக்கத் திருந்தி உலகோர்-நலம்உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி. 16 யோகம்,யாகம்,ஞானம் ஊருக் குழைத்திடல் யோகம்;-நலம்ஓங்கிடு மாறு வருந்துதல் யாகம்போருக்கு நின்றிடும் போதும்-உளம்பொங்கல் இல்லாத அமைதிமெய்ஞ் ஞானம். 17 பரம்பொருள் எல்லையில் லாத உலகில்-இருந்தெல்லையில் காலம் இயங்கிடும் தோற்றம்எல்லையில் லாதன வாகும்-இவையாவையு மாயிவற் றுள்ளுயி ராகி, 18 எல்லையில் லாப்பொருள் ஒன்று-தான்இயல்பறி வாகி இருப்பதுண் டென்றே,சொல்லுவர் உண்மை தெளிந்தார்-இதைத்தூவெளி யென்று தொழுவர் பெரியோர். 19 நீயும் அதனுடைத் தோற்றம்-இந்தநீல நிறங்கொண்ட வானமும் ஆங்கே,ஓயுதல் இன்றிச் சுழலும்-ஒளிஓங்குபல் கோடிக் கதிர்களும் அஃதே, 20 சக்திகள் யாவும் அதுவே-பல்சலனம் இறத்தல் பிறத்தலும் அஃதேநித்திய மாமிவ் வுலகில்-கடல்நீரில் சிறுதுளி போலும்இப் பூமி, 21 இன்பமும் ஓர்கணத் தோற்றம்-இங்குஇளமையும் செல்வமும் ஓர்கணத் தோற்றம்;துன்பமும் ஓர்கணத் தோற்றம்-இங்குதோல்வி முதுமை ஒருகணத் தோற்றம். 22 முக்தி தோற்றி அழிவது வாழ்க்கை-இதில்துன்பத்தோ டின்பம் வெறுமையென் றோதும்மூன்றில் எதுவரு மேனும்-களிமூழ்கி நடத்தல் பரசிவ முக்தி. (இனி) 23 இளசை ஒருபா ஒருபஃது காப்பு நித்தரெனும் தென்னிளசை நின்மலனார் தாம்பயந்தஅத்திமுகத் தெங்கோ னடியிணையே-சித்திதரும்என்தமிழி லேது மிழுக்கிலா மேயஃதுநன்றாகு வென்றருளும் நன்கு. நூல் தேனிருந்த சோலைசூழ் தென்னிளசை நன்னகரின்மானிருந்த கையன் மலரடியே-வானிற்சுரர்தம னியன்மால் தொழுங்காற் கிரீடத்தரதனங்கள் சிந்து மகம். 1 அகவிடத்திற் கோர்திலக மாமென் னிளசைப்பகவனென் னெட்டீசன் பதமே-திகிரிபொருந்துகரத் தானன்றோர் போத்திரியாய்த் தேடிவருந்தியுமே காணாச்செல் வம். 2 செல்வ மிரண்டுஞ் செழித்தோங்குந் தென்னிளசையில்வளரும் ஈசன் எழிற்பதமே-வெல்வயிரம்ஏந்துகரத் தான்கரியன் எண்கணன்தம் உள்ளத்துப்போந்துவளர் கின்ற பொருள். 3 பொருளாள ரீய வேற்போ ரிளசைமருளாள ரீச ரடியே-தெருள்சேர்தமனா மறையவன்மேற் றன்பாச மிட்டசமனாவி வாங்கும்பா சம் 4 சங்கந் தவழ்கழனி தண்இளசை நன்னகரில்எங்கள் சிவனார் எழிற்பதமே-துங்கமிகும்வேத முடியின் மிசையே விளங்குறுநற்சோதியென நெஞ்சே துணி 5 துணிநிலவார் செஞ்சடையன் தோள்இளசை ஊரன்மணிகண்டன் பாத மலரே-பிணிநரகில்வீழச்செய் யாது விரும்பியஈந் தேஅடியர்வாழச்செய் கின்ற மருந்து. 6 மருளறக் கற்றோர்கண் மருவிளசை ஊரில்வருமிறைவன் பாத மலரே-திருவன்விரைமலரா விட்ட விழியாம் வியன்றாமரைபூத்த செந்தா மரை. 7 தாமரையின் முத்தெங்குந் தான்சிதறுந் தென்னிளசைக்கோமானெட் டீசன்மலர் கொள்பதமே-நாமவேல்வல்லரக்கன் கைலை வரையெடுத்த காலவனைஅல்லற் படவடர்த்த தால் 8 ஆல விழியா ரவர்முலைநேர் தண்வரைசூழ்கோல மணிஇளசைக் கோன்பதமே-சீலமுனிவர் விடுத்த முயலகன் மீதேறித்தனிநடனஞ் செய்ததுவே தான் 9 தானே பரம்பொரளாந் தண்ணிளசை யெட்டீசன்தேனேய் கமலமலர்ச் சீரடியே-யானேமுன்செய்தவினை தீர்த்துச் சிவாநந்தம் பொங்கியருள்எய்திடவுஞ் செய்யும் எனை. 10 தனி கன்னனெனும் எங்கள் கருணைவெங்க டேசுரெட்டமன்னவன் போற்றுசிவ மாணடியே-அன்னவனும்இந்நூலுந் தென்னா ரிளசையெனும் நன்னகரும்எந்நாளும் வாழவைக்கு மே. 11 தனிமை இரக்கம் குயிலனாய் நின்னொடு குலவியின் கலவிபயில்வதிற் கழித்த பன்னாள் நினைந்துபின்இன்றெனக் கிடையே எண்ணில்யோ சனைப்படும்குன்றமும் வனமும் கொழுதிரைப் புனலும்மேவிடப் புரிந்த விதியையும் நினைத்தால். 5 பாவியென் நெஞ்சம் பகீரெனல் அரிதோ?கலங்கரை விளக்கொரு காவதம் கோடியாமலங்குமோர் சிறிய மரக்கலம் போன்றேன்முடம்படு தினங்காள்! முன்னர்யான் அவளுடன்உடம்பொடும் உயிரென உற்றுவாழ் நாள்களில் 10 வளியெனப் பறந்தநீர் மற்றியான் எனாதுகிளியினைப் பிரிந்துழிக் கிரியெனக் கிடக்கும்செயலையென் இயம்புவல் சிவனே!மயலையிற் றென்றெவர் வகுப்பரங் கவட்கே? இப்பாடல் பாரதியாரின் குறிப்புகளுடன் மதுரை விவேகபாநு பத்திரிகையில் (1904-ஆம் ஆண்டு ஜூலை மாத இதழில்) வெளியானது. (1. கப்பல்கட்கு வெளிச்சங் காட்டும் கலங்கரை விளக்கு; இதனை லைட் ஹவுஸ் என்பர். 2. கோடியாக. 3. காலக் கழிவின் அருமையைக் குறித்தது. 4. காற்று) குருவிப் பாட்டு (புதுவை, தமிழ் அன்பன் - 23-10-1946) அருவி போலக் கவிபொழிய - எங்கள்அன்னை பாதம் பணிவேனேகுருவிப் பாட்டை யான்பாடி - அந்தக்கோதைபாதம் அணிவேனே. கேள்வி சின்னஞ்சிறு குருவி - நீ செய்கிற வேலை யென்ன?வன்னக் குருவி - நீ வாழும் முறை கூறாய்! குருவியின் விடை கேளடா மானிடவா - எம்மீல் கீழோர் மேலோர் இல்லை.மீளா அடிமையில்லை - எல்லோரும் வேந்தரெனத் திரிவோம்உணவுக்குக் கவலையில்லை - எங்கும் உணவு கிடைக்கு மடா.பணமும் காசுமில்லை - எங்குப் பார்க்கினும் உணவேயடா.சிறியதோர் வயிற்றினுக்காய் - நாங்கள் ஜன்மமெல்லாம் வீணாய்மறிகள் இருப்பதுபோல் - பிறர் வசந்தனில் உழல்வதில்லை.காற்றும் ஒளியுமிகு ஆகா யமே எங்களுக்குஏற்றதொரு வீடு - இதற் கெல்லை யொன் றில்லையடா.வையகம் எங்குமுளது உயர்வான பொருளெல்லாம்ஐயமின் றெங்கள் பொருள் - இவைஎம் ஆகாரமாகுமடா. ஏழைகள் யாருமில்லை செல்வம் ஏறியோர் என்றுமில்லை.வாழ்வுகள் தாழ்வுமில்லை - என்றும் மாண்புடன் வாழ்வ மடா.கள்ளம் கபடமில்லை - வெறும் கர்வங்கள் சிறுமையில்லை.எள்ளற்குரிய குணம் - இவையாவும் உம் குலத்திலடா.களவுகள் கொலைகளில்லை - பெருங் காமுகர் சிறுமை யில்லை.இளைத்தவர்க்கே வலியர் - துன்பம் இழைத்துமே கொல்லவில்லை.சின்னஞ்சிறு குடிலில் - மிகச்சீரழி வீடுகளில்இன்னலில் வாழ்ந்திடுவீர் - இது எங்களுக்கு இல்லையடா.பூநிறை தருக்களிலும் - மிகப் பொழிவுடைச் சோலையிலும்தேனிறைமலர்களிலும் - நாங்கள் திரிந்து விளையாடுவோம். குளத்திலும் ஏரியிலும் - சிறுகுன்றிலும் மலையினிலும்புலத்திலு<ம் வீட்டினி<லும் - எப்பொழுதும் விளையாடுவோம்.கட்டுகள் ஒன்றுமில்லை - பொய்க் கறைகளும் ஒன்றுமில்லை.திட்டுகள் தீதங்கள் - முதற் சிறுமைகள் ஒன்றுமில்லை.குடும்பக் கவலையில்லை - சிறு கும்பியத் துயருமில்லைஇடும்பைகள் ஒன்றுமில்லை - எங்கட் கின்பமே என்றுமடா.துன்ப மென்றில்லையடா - ஒரு துயரமும் இல்லையடா.இன்பமே எம்வாழ்க்கை - இதற்கு ஏற்ற மொன்றில்லையடாகாலையில் எழுந்திடுவோம் - பெருங்கடவுளைப் பாடிடுவோம்.மாலையும் தொழுடுவோம் - நாங்கள் மகிழ்ச்சியில் ஆடிடுவோம் தானே தளைப்பட்டு - மிகச் சஞ்சலப்படும் மனிதாநானோர் வார்த்தை சொல்வேன் - நீ மெய்ஞ்ஞானத்தைக் கைக் கொள்ளடா.விடுதலையைப் பெறடா - நீ விண்ணவர் நிலைபெறடா.கெடுதலை ஒன்றுமில்லை - உன் கீழ்மைகள் உதறிடடா.இன்ப நிலைபெறடா - உன் இன்னல்கள் ஒழிந்ததடா.துன்பம் இனியில்லை - பெருஞ் சோதி துணையடா.அன்பினைக் கைக்கொள்ளடா - இதை அவனிக்கிங்கு ஓதிடடாதுன்பம் இனியில்லை - உன் துயரங்கள் ஒழிந்ததடா,சத்தியம் கைக்கெள்ளடா - இனிச் சஞ்சலம் இல்லையடா.மித்தைகள் தள்ளிடடா - வெறும் வேஷங்கள் தள்ளிடடா.தர்மத்தைக் கைக்கொள்ளடா - இனிச் சங்கடம் இல்லையடா.கர்மங்கள் ஒன்றுமில்லை - இதில் உன் கருத்தினை நாட்டிடடாஅச்சத்தைவிட்டிடடாநல் ஆண்மையைக் கைக் கொள்ளடாஇச் சகத்தினிமேல்நீ - என்றும் இன்பமே பெறுவையடா. வங்கமே வாழிய(சுதேசமித்திரன் 15-9-1905) 1. அங்கமே தளர் வெய்திய காலையும்அங்கோர் புன்னரி தந்திடு மூனுணாச்சிங்கமே யென வாழ்தல் சிறப்பெனாச்செம்மை கூறிநந் தாய்ப் பெருந் தேயத்தைப்பங்கமே பெறு மிந்நிலை நின்றுயர்பண்டை மாண்பிடைக் கொண்டினி துய்த்திடும்வங்கமே யென வந்தனை வாழி நீவங்கமே நனி வாழிய! வாழிய!! 2. கற்பகத் தருப் போலெது கேட்பினும்கடிது நல்கிடும் பாரத நாட்டினிற்பொற்புறப் பிறந்தோம். நமக்கோர்விதப்பொருளு மன்னிய ரீதல் பொறுக்கிலேம்அற்பர் போலப் பிறர் கர நோக்கியோமவனி வாழ்தலா காதென நன்கிதைவற்புறுத்திடத் தோன்றிய தெய்வமேவங்கமே நனி வாழிய! வாழிய!! 3. கண்ணினீர் துடைப்பாய் புன்னகை கொள்வாய்கவினுறும் பார தப்பெருந் தேவியேஉண்ணி கழ்ந்திடுந் துன்பம் களைதியால்உன்றன் மைந்தர்கள் மேனெறி யுற்றனர்.பெண்ணி னெஞ்சிற் கிதமென லாவதுபெற்ற பிள்ளைகள் பீடுறவே யன்றோ?மண்ணினீ புகழ் மேவிட வாழ்த்தியவங்கமே நனி வாழிய! வாழிய!! வந்தே மாதரம் (சுதேசமித்திரன் 20-2-1906) 1. ஆரியமென்ற பெரும்பெயர் கொண்டவெம்அன்னையின் மீதுதிகழ்அன்பெனு மென்கொடி வாடிய காலையதற்குயிர் தந்திவான்மாரியெ னும்படி வந்து சிறந்ததுவந்தே மாதரமேமாணுயர் பாரத தேவியின் மந்திரம்வந்தே மாதரமேவீரிய ஞான மரும்புகழ் மங்கிடமேவி நல் ஆரியரைமிஞ்சி வளைந்திடு புன்மை யிருட்கணம்வீவுற வங்கமகாவாரிதி மீதி லெழுந்த இளங்கதிர்வந்தே மாதரமேவாழிந லாரிய தேவியின் மந்திரம்வந்தே மாதரமே. 2. காரடர் பொன்முடி வானி மயந்தருகங்கை வரம்பினிலும்கன்னியை வந்தொரு தென்றிசை யார்கலிகாதல் செயா யிடையும்வீரர்கள் மிஞ்சி விளங்கு புனாமுதல்வேறுள வூர்களிலும்விஞ்சை யெனும்படி யன்புடன் யாரும்வியந்திடு மந்திரமும்பாரத தேச விரோதிகள் நெஞ்சுபதைத்திடு மந்திரமும்பாதக ரோதினு மேதக வுற்றிடுபண்புயர் மந்திரமும்வாரமுறுஞ்சுவை யின்னற வுண்கனி,வான மருந்தெனவேமாணுயர் பாரத தேவி விரும்பிடும்வந்தே மாதரமே. என்னே கொடுமை!(சுதேசமித்திரன் 4-4-1906) 1. மல்லார் திண்டோட் பாஞ்சாலன்மகள் பொற்கரத்தின் மாலுற்றவில்லால் விஜயன் அன்றிழைத்தவிந்தைத் தொழிலை மறந்திலிரால்பொல்லா விதியால் நீவிரவன்போர்முன் னிழைத்த பெருந் தொழில்கள்எல்லா மறந்தீ ரெம்மவர்காள்என்னே கொடுமை யீங்கிதுவே! 2. வீமன் திறலு மவற்கிளையவிஜயன் திறலும் விளங்கிநின்றசேம மணிப்பூந் தடநாட்டில்சிறிய புழுக்கள் தோன்றி வெறுங்காம நுகர்தல் இரந்துண்டல்கடையாம வாழ்க்கை வாழ்ந்துபினர்ஈமம் புகுத லிவைபுரிவார்என்னே கொடுமை யீங்கிதுவே! யான்(சுதேசமித்திரன் 17-9-1906) ஆயிரங் கோடி அறிஞர்கள் பற்பலஆயிர யுகங்க ளாராய்ந் தறிகிலாயான் உடையியற்கை யானோ அறிவன்!மீனுணர்ந் திடுங்கொல் வியன்கடற் பெருமை?அருள்வழிக் காண்கென் றருளினர் பெரியோர்,மருள்வழி யல்லான் மற்றொன் றுணர்கிலேன்அகிலமும் யான் என ஆன்றோ ரிசைப்பர்மகிதலத் திருளின் மண்டிய மனத்தேன்யானதை யொரோவழிக் கண்டுளேன், எனினும்மானத ஒளியது மங்குமோர் கணத்தேயானெனும் பொருள்தான் என்னை கொல்? அதனையிவ்வூனெனக் கொள்வ ருயிலார் சிலரே,பிரமமே யானெனப் பேசுவர் பேசுக!பிரமமே யானெனப் பேசினர் பெரியோர்! சந்திரிகை(சுதேசமித்திரன் 25-9-1906) யாணர்க் குறையுளா மிந்து நாடதனிற்காணற் கினிய காட்சிகள் பலவினுமாணப் பெரிய வனப்பமைந் தின்கவிவாணர்க் கமுதா யிங்கிடும் பொருளிதென்றூணப் புலவோ னுரைத்துளன் முன்னாள்அஃதுதான்,கருமையிற் படர்ந்த வானமாங் கடலிடைஒருமையிற் றிகழு மொண்மதித் தீவினின்றெல்லாத் திசையினு மெழில்பெற வூற்றுஞ்சொல்லா லினிமைகொள் சோதியென் றோதினன்.ஓர் முறைகடற்புற மணன்மிசைத் தனியே கண்ணயர்ந்திடைப்படு மிரவி லினிதுகண் விழித்துயான்வானக நோக்கினேன் மற்றதன் மாண்பினையூனமா நாவினி லுரைத்தலும் படுமோ?நினைவறுந் தெய்விகக் கனவிடைக்குளித்தேன் வாழிமதி! அனுபந்தங்கள்ஜாதீய கீதம் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயர் வங்காளியில் இயற்றிய வந்தே மாதரம்கீதம். ஸுஜலாம்,ஸுபலாம் மலயஜ சீதலாம்ஸஸ்ய ஸ்யாமளாம் மாதரம். -வந்தே மாதரம் ஸுப்ர ஜ்யோத்ஸ்நா புளகித யாமிநீம்புல்ல குஸுமித த்ருமதள ஸோபிநும்ஸுஹாஸிநீம்,ஸுமதுர பாஷிணீம்ஸுகதாம்,வரதாம்,மாதரம். -வந்தே மாதரம் ஸப்த கோடி கண்ட கலகல நிநாத கராலேத்விஸப்த கோடி புஜைர் த்ருதகர கரவாலேகே போலே,மா துமி அபலேபஹுபல தாரிணீம்,நமாமி தாரிணீம் -வந்தே மாதரம் துமி வித்யா,துமி தர்ம,துமி ஹ்ருதி,துமி மர்ம,த்வம்ஹி ப்ராணா:சரீரேபாஹுதே துமி மா சக்திதொமா ரேயி ப்ரதிமா கடிமந்திரே மந்திரே. -வந்தே மாதரம் த்வம்ஹி துர்கா தசப்ரஹரண தாரிணீகமலா கமலதள விஹாரிணீவாணீ வித்யா தாயிநீ,நமாமித்வாம். -வந்தே மாதரம் நமாமி,கமலாம்,அமலாம்,அதுலாம்,ஸுஜலாம்,ஸுபலாம் மாதரம்ஸ்யாமளாம்,ஸரளாம்,ஸுஸ்மிதாம்,பூஷிதாம், -வந்தே மாதரம் பாரதியாரின் சமர்ப்பணமும், முகவுரையும் இனிய நிலவின் ஒளியால் விழுங்கப்பட்டு உலகம் அவாங்மன கோசரமாகிய சவுந்தர்யத்தைப் பெற்றிருக்கும் சமயத்தில் ஒவ்வொரு கவிஞனுடைய உள்ளமும் தன்னையறியாது குதூகலமடைகின்றது. சூரியன் உதித்தவுடனே சேதனப் பிரகிருதி மட்டுமேயன்றி அசேதனப் பிரகிருதியும், புதிய ஜீவனையும் உற்சாகத்தையும் பெற்றுத் திகழ்கின்றது. இவற்றினை யொப்பவே, நாட்டில் ஓர் புதிய ஆதர்சம்-ஓர் கிளர்ச்சி-ஓர் மார்க்கம்-தோன்றுமேயானால் மேன்மக்களின் நெஞ்சமனைத்தும், இரவியை நோக்கித் திரும்பும் சூரியகாந்த மலர்போல, அவ்வாதர்சத்தை நோக்கித் திரும்புகின்றன. சென்ற சுபகிருது வருஷத்திலே பாரத நாட்டில், சர்வ சுபங்களுக்கும் மூலாதாரமாகிய தேசபக்தி என்ற நவீன மார்க்கம் தோன்றியது. நல்லோர்களின் சிந்தையெல்லாம் உடனே புளகிதமாயின. நல்லோருடைய குணங்களிலே குறையுடையவனாகிய யானும் தேவியினது கிருபையால் அப்புதிய சுடரினிடத்து அன்பு பூண்டேன். அவ்வன்பு காரணமாகச் சென்ற வருஷம் சில கவிதை மலர் புனைந்து மாதாவின் திருவடிக்குப் புனைந்தேன். நான் எதிர்பார்த்திராத வண்ணமாக மெய்த்தொண்டர்கள் பலர் இம்மலர்கள் மிக நல்லன என்று பாராட்டி மகிழ்ச்சியறிவித்தார்கள். மாதாவும் அதனை அங்கீகாரம் செய்து கொண்டாள். இதனால் துணிவு மிகுதியுறப் பெற்றேனாகி, மறுபடியும் தாயின் பாதமலர்களுக்குச் சில புதிய மலர்கள் கொணர்ந்திருக்கிறேன். இவை மாதாவின் திருவுள்ளத்திற்கு மகிழ்ச்சியளிக்குமென்றே நினைக்கின்றேன். குழலினிது யாழினி தென்பதம் மக்கள்மழலைச் சொற் கேளா தவர்என்பது வேதமாதலின். சமர்ப்பணம் எனக்கு ஒரு கடிகையிலே, மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும், சொல்லாமலுணர்த்திய குருமணியும் பகவான் விவேகானந்தருடைய தர்ம புத்திரியும் ஆகிய ஸ்ரீமதி நிவேதிதா தேவிக்கு இக்கவிதைத் தொகுப்பை சமர்ப்பிக்கின்றேன்.-சி.சுப்ரமணிய பாரதி, 1909.
4980 days ago
4980 days ago